விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வந்தவாசியில் சிபிஎம் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்
8 hours before

விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய டிஎஸ்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் வந்தவாசியில் சிபிஎம் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்

வந்தவாசி, நவ. 3-பயிர் கடன் தள்ளுபடி உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளுக்காகப் போராடிய மாற்றுத்திறனாளி உள்ளிட்டவிவசாயிகள் மீது தாக்குதல் நடத்தி, அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்ட காவல்துறையைக் கண்டித்து, வந்தவாசியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிசார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விவசாயிகளுக்கு முழுமையாகப் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழகத்திற்கு உரிய காவிரி நீரைத்திறந்து விட வேண்டும்என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் வந்தவாசியில் அக்டோபர் 21ல் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. அப்போது மறியலில் ஈடுபட்ட வந்தவாசியைச் சேர்ந்தமாற்றுத்திறனாளி விவசாயி நாராயணமூர்த்தி என்பவர் எழுந்திருக்கத் தாமதமானதால், வந்தவாசி பொறுப்பு துணை காவல் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) மீனாட்சிநாதன் அவரை அருவருக்கத்தக்க வகையிலும் அசிங்கமாகவும் திட்டினார். மேலும்போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளைப் காவல்துறையினர் முரட்டுத்தனமாக தரதரவென்று இழுத்துச் சென்று காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்தினர். டி.எஸ்.பி-யின் இந்த வரம்பு மீறிய செயல் தொலைக்காட்சி மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இந்நிலையில், விவசாயிகள் மீது ஏவப்பட்ட அடக்குமுறையைக் கண்டித்தும், அருவருக்கத்தக்க வகையில் பேசி அத்துமீறி நடந்துகொண்ட டி.எஸ்.பி. மீனாட்சிநாதன் உள்ளிட்டகாவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகேமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.கட்சியின் வட்டாரச் செயலாளர் அ. அப்துல்காதர் தலைமை தாங்கினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், சிபிஎம்மாநிலச் செயற்குழு உறுப்பினர் ந. பாண்டி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் சாமி. நடராஜன், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எம். சிவக்குமார், மாவட்டசெயலாளர் ப. செல்வன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

மேலும், தவிச மாநிலக் குழு உறுப்பினர் இரா. சரவணன், மாவட்டசெயலாளர் ஏ. லட்சுமணன், கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகி அரிதாசு,சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எம். வீரபத்திரன், ந. சேகரன், கே. வாசுகி, எம். பிரகலநாதன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர். அண்ணாமலை, ச. குமரன் மற்றும்திரளான விவசாயிகளும் பொதுமக்களும் பங்கேற்று காவல்துறையின் அத்துமீறலுக்கு எதிராகவும், அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்டடிஎஸ்பிக்கு எதிராகவும் கண்டனக் குரலெழுப்பினர்.

விவசாயிகளின் கூட்டுறவுக் கடன்களை முழுமையாகத் தள்ளுபடி செய்ய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,போராடிய விவசாயிகள் மீது ஏவப்பட்ட தாக்குதலுக்குக் காரணமான காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.