தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

தார்ச்சாலை அமைக்க வலியுறுத்தி சிபிஎம் நடைபயணம்

14 Jul 2026, 10:34 pm
தார்ச்சாலை அமைக்க வலியுறுத்தி சிபிஎம் நடைபயணம்
<p><strong>தார்ச்சாலை அமைக்க வலியுறுத்தி சிபிஎம் நடைபயணம்</strong></p><p>உடுமலை, ஜூலை 14- உடுமலை ஊராட்சி ஒன்றியம், குரல்குட்டை கிராமத்திற்கு செல் லும் இணைப்பு சாலையை தார்ச் சாலையாக அமைக்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், செவ்வாயன்று உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை 500க்கும் மேற்பட்டோர் பங் கேற்று நடைபயணமாக சென்று மனு அளித்தனர். திருப்பூர் மாவட்டம், உடுமலை அரசு கலைக்கல்லூரி அருகில் செல்லும் பி.ஏ.பி கால்வாய் வலது கரை ஈப்பு பாதையானது குரல் குட்டை, போடிபட்டி, மடத்தூர், ஆலாம்பாளையம் உள்ளிட்ட பல் வேறு கிராமங்களை இணைக்கும் முக்கிய பாதையாகும். சுமார் 300 மீட்டர் தூரமுள்ள இப்பாதையை நாள்தோறும் பள்ளி, கல்லூரி மாண வர்கள், தொழிலாளர்கள், விவசா யிகள் என ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வரு கின்றனர். தற்போது இப்பாதை மிக மோசமாக சேதமடைந்து, குண் டும் குழியுமாக மாறியுள்ளதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு பொதுமக்கள் படுகாயமடைந்து வருகின்றனர். இச்சாலையை தார்ச் சாலையாக மாற்றக்கோரி ஏற்க னவே வட்டார வளர்ச்சி அலுவலர், நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு மனுக்கள் அளித்தும், கிராமசபை யில் தீர்மானங்கள் நிறைவேற்றியும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்து, சிபிஎம் குரல்குட்டை வடக்கு கிளைச் செய லாளர் தட்சிணாமூர்த்தி தலைமை யில், கிளைச் செயலாளர்கள் செந் தில்குமார், நாகரத்தினம் முன்னி லையில் 500க்கும் மேற்பட்ட பொது மக்கள் திரண்டனர். பழுதடைந்த பாதையிலிருந்து உடுமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் வரை சுமார் 3 கி.மீ தொலைவிற்கு நடைபயண மாக சென்று, வட்டார வளர்ச்சி அலு வலரிடம் கோரிக்கை மனு அளித்த னர். இப்போராட்டத்தின் கோரிக் கைகளை விளக்கி சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கி.கனக ராஜ் உரையாற்றினார்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.