முந்தய பக்கம்

மதுக்கடையை அகற்றக்கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

19 Jul 2026, 10:33 pm
மதுக்கடையை அகற்றக்கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

மதுக்கடையை அகற்றக்கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்

அவிநாசி, ஜூலை 19- திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதியிலுள்ள மதுபானக் கடையை அகற்ற வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மற்றும் அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஞாயிறன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர். திருப்பூர் மாவட்டம், திருமுரு கன்பூண்டி நகராட்சிக்குட்பட்ட திருப்பூர் சாலையில் மதுபானக் கடை எண்:1513 செயல்பட்டு வரு கிறது. இக்கடையால் அப்பகுதி பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப் பட்டு வருகின்றனர். கடையின் அருகே பள்ளிக்கூடங்கள் மற்றும் கோவில்கள் இருப்பதால் மாணவர் கள், பெண்கள் உள்ளிட்டோருக்கு இடையூறு ஏற்படுகிறது. இந்த கடையை வேறு இடத்திற்கு மாற்றக்கோரி டாஸ்மாக் நிர்வாகம், மாவட்ட ஆட்சியர், அவிநாசி சட்டமன்ற உறுப்பினரும், அமைச் சருமான கமலி உள்ளிட்டவர்களி டம் பலமுறை மனுக்கள் அளிக்கப் பட்டும், இதுவரை எந்த நட வடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில், இந்த கடையை உட னடியாக வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற் றும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் ஞாயிறன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திரு முருகன்பூண்டி பகுதியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் கௌரி மணி தலைமை வகித்தார். இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப் பினர் நந்தகோபால், ஒன்றியச் செய லாளர் ஈஸ்வரமூர்த்தி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வேலுச்சாமி, வெங்கடாசலம், பாலசுப்பிரமணி யம், நகர்மன்ற உறுப்பினர் சுப்பிர மணி உட்பட பலர் கலந்து கொண்ட னர்.

Share
FacebookXWhatsAppTelegram