தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் சிபிஎம் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம்

19 Jun 2026, 11:58 pm
பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் சிபிஎம் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம்
<p><strong> பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் சிபிஎம் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம்</strong></p><p>திருவண்ணாமலை, ஜூன் 19- மத்திய அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை கண்டித்து, திருவண்ணா மலை மாவட்டம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளியன்று (ஜூன் 19)ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு, அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம், மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தைச் சீரழிக்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்த்துப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. திருவண்ணாமலை திருவண்ணாமலை திருவண்ணா மலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ப.செல்வன், மாநகர செயலாளர் எம். பிரகலநாதன் ஆகியோர் பங்கேற்றனர். வந்தவாசி மற்றும் கலசப்பாக்கம் பகுதி களில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் மாநிலக் குழு உறுப்பினர்கள் ஆர்.பத்ரி, எம்.சிவக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். செய்யாரில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் ப.செல்வன் தலைமை தாங்கினார். போளூரில் நடைபெற்ற மாவட்ட செயற்குழு உறுப்பினர் வீரபத்திரன் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டங்களில், கட்சியின் மாவட்ட, வட்டார அளவிலான நிர்வாகிகள் மற்றும் ஏராளமான தொண்டர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராகத் தங்களது வலுவான கண்டனத்தைப் பதிவு செய்தனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.