அமோனியா கசிவால் பலியானோர் குடும்பங்களுக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு கேட்டு சிபிஎம் ஆர்ப்பாட்டம்!
25 Jun 2026, 9:04 pm

அமோனியா கசிவால் பலியானோர் குடும்பங்களுக்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு கேட்டு சிபிஎம் ஆர்ப்பாட்டம்!

திருவள்ளூர், ஜூன் 25 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருவள்ளூரில் வியாழக்கிழமை (ஜூன் 25) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவள்ளூர் அருகே கன்னிகைபேரில் அமோனியா வாயுக் கசிவால் 12 இளம் பெண் தொழிலாளர்கள் உயிரிழந்த சம்ப வத்திற்கு காரணமான தொழிற்சாலை நிர்வாகம், அதிகாரிகளின் அலட்சியத்தைக் கண்டித்தும், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு பெற்றுத்தர வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி. பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் கே. பாலகிருஷ்ணன் பங்கேற்று கோரிக் கைகளை முன்வைத்து உரையாற்றினார்.

மாவட்டச் செயலாளர் எஸ். கோபால், ஊத்துக் கோட்டை, திருவள்ளூர், சோழவரம், மீஞ்சூர், பூந்தமல்லி, திருத்தணி ஆகிய வட்டங்களின் செயலாளர்கள், மாவட்ட மூத்த நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் நிறைவில், கே. பாலகிருஷ்ணன் தலைமையில், மாவட்ட ஆட்சியர் ச. கவிதாவை நேரில் சந்தித்து மனு அளித்து முறையீடு செய்யப்பட்டது.

அப்போது, மாவட்டம் முழுவதும் உள்ள தொழிற்சாலைகளில் முறையான ஆய்வு மேற்கொண்டு இத்தகைய அவலங்களைத் தடுக்க நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதியளித்தார்.

12 பேரின் உயிரைப் பற்றிப் பேசுவதற்கு நேரமில்லையா? கே. பாலகிருஷ்ணன் கேள்வி

திருவள்ளூர் ஆர்ப்பாட்டத்தில் பேசிய, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே. பாலகிருஷ்ணன் பேசுகையில், தொழிற்சாலை நிர்வாகம் வெளிமாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண்களைக் கொத்தடிமைகளாக அடைத்து வைத்து, நள்ளிரவு வரை வேலை வாங்கியதே இந்த கொடூரத்திற்கு காரணம் என்று குற்றம் சாட்டினார். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களில் 16 வயதுக்கும் குறைவான சிறுமிகள் இருப்பதாகவும், அவர்களின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அலட்சியத்தால் நடந்த படுகொலை

சட்டமன்றத்தில் இப்பிரச்சனையை விவாதிக்க அனுமதி மறுக்கப்பட்டதைக் கடுமையாக விமர்சித்த கே. பாலகிருஷ்ணன், “74 தொழிலாளர்களின் உயிர் பறிபோகும் அளவிற்கான ஆபத்து குறித்தும், 12 பேர் பலியான துயரம் குறித்தும் பேசுவதற்கு சட்டமன்றத்தில் நேரமில்லையா? சட்டமன்றம் லாவணி பாடும் மன்றமாகிவிடக் கூடாது” என்றும் கூறினார். உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இது வெறும் விபத்தல்ல, நிர்வாகத்தின் அலட்சியத்தால் நடந்த படுகொலை என்பதால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால் பேசுகையில், பாதிக்கப்பட்ட பெண் தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக வைத்திருந்தது சட்டப்படி குற்றம் என்றும், தொழிற்சாலை நிர்வாகத்தினர் மீது குழந்தை தொழிலாளர் மற்றும் கொத்தடிமை ஒழிப்பு சட்டங்களின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், மாவட்டம் முழுவதும் உள்ள தனியார் தொழிற்சாலைகள், செங்கல் சூளைகள் மற்றும் விவசாயப் பண்ணைகளில் குழந்தை தொழிலாளர்கள் மற்றும் கொத்தடிமை முறை குறித்த ஆய்வை அரசு முறையாக மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.