வாவிபாளையம் துணை மின்நிலைய திட்டத்தை உடனே தொடங்க வலியுறுத்தி சிபிஎம் ஆர்ப்பாட்டம்
20 Jul 2026, 11:40 pm
<p><strong>வாவிபாளையம் துணை மின்நிலைய திட்டத்தை உடனே தொடங்க வலியுறுத்தி சிபிஎம் ஆர்ப்பாட்டம்</strong></p><p>திருப்பூர், ஜூலை 20 - திருப்பூர் நெருப்பெரிச்சல் அருகே வாவிபாளையம் துணை மின்நிலைய திட்டத்தை உடனே தொடங்க வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் வடக்கு ஒன்றியம் சார்பில் நெருப்பெரிச்சல் பேருந்து நிறுத் தம் அருகில் ஞாயிறன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றியக்குழு உறுப்பினர் எம். தனராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், புதிய துணை மின் நிலைய திட்டத்தை உடனடியாக துவங்குவதுடன், 30 ஆண்டுகளுக்கு முன்பு பட்டா வழங்கப்பட்ட நிலங்களை நத்த மாக வகை மாற்றம் செய்ய வேண் டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், பாரதி நகர், மே நகர், எம்.ஜி.ஆர் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நீண்ட நாட்களாக வசிக்கும் மக்க ளுக்கு பட்டா வழங்க வேண்டும்; மூடப்பட்ட கூலிபாளையம் ரயில் நிலையத்தை மீண்டும் திறக்க வேண்டும்; ஜி.என்.கார்டன் நகர்ப் புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுற்றுச் சுவர் அமைத்து இரவு நேர காவலர் மற்றும் கூடுதல் செவிலியர் நியமனம் செய்து 24 மணி நேர மருத்துவமனையாக செயல்ப டுத்த வேண்டும். விடுபட்ட பாதாளச் சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் மற்றும் பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் கே.காம ராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் ஆ. சிகாமணி, ஒன்றியக்குழு உறுப்பி னர்கள் எஸ்.பானுமதி, இ.மங்க லட்சுமி மற்றும் கிளைச் செயலா ளர்கள் ஆர்.பாலசுப்பிரமணியம், பி.வெள்ளைச்சாமி உள்ளிட்ட திர ளான பொதுமக்கள் கலந்து கொண் டனர். இதன் தொடர்ச்சியாக, திங்க ளன்று மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர் நாள் கூட்டத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி கட்சியின் சார்பில் மனுவும் அளிக்கப்பட்டது.</p>
