எளிய மக்களை பாதிக்கும் கடுமையான விலை உயர்வு நவ.3ஆம் தேதி திருப்பூரில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்
1 Nov 2026, 1:21 am

எளிய மக்களை பாதிக்கும் கடுமையான விலை உயர்வு நவ.3ஆம் தேதி திருப்பூரில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், அக்.31 -ஏழை எளிய மக்களை மட்டு மின்றி நடுத்தர மக்களையும் கடுமையாக பாதிக்கும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அறைகூவல்விடுத்துள்ளது. இதன்தொடர்ச்சியாக, நவம்பர் 3ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், உடுமலை, ஊத்துக்குளி ஆகிய பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சி தீர்மானித்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு கூட்டம் வெள்ளியன்று திருப்பூர் தியாகிபழனிச்சாமி நிலையத்தில் நடைபெற்றது. கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ச.நந்தகோபால் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மத்தியக்குழு உறுப்பினர் என்.குணசேகரன், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.காமராஜ், தௌ.சம்சீர் அகமது,மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி உள்பட மாவட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு: தமிழ்நாட்டில். அரிசி, பருப்பு, சர்க்கரை, காய்கறி மற்றும் அன்றாட உபயோக பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து இருப்பது, சாதாரண ஏழை எளிய மக்களை மட்டுமின்றி,நடுத்தர மக்களையும் பெரிதும் பாதித்துள்ளது. ஜிஎஸ்டி வரிவிதிப்பு, ஆன்லைன் வணிகம், பதுக்கல் ஆகியனவும்விலை உயர்வுக்கான காரணங்களாக உள்ளன.

ரேஷனில் வழங்கப்படும் அரிசியின் தரமும் குறைவாக இருப்பதால் மக்கள் வெளிச் சந்தை நோக்கி தள்ளப்பட்டு அதுவும் விலை உயர்வுக்கு இட்டுச் சென்றுள்ளது. மக்களின் அன்றாட வாழ்வை பாதிக்கிற

விலை உயர்வுகள் மேலும் கடன் அதிகரிப்பிற்கே வழி வகுக்கும். பொது விநியோக முறையும் பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே,மக்களின் வாழ்வுரிமை பெரிதும் கேள்விக்கு உள்ளாகியுள்ளது. கார்ப்பரேட்டுகளுக்கு வரிச் சலுகைகளை வாரி வழங்கிவிட்டு உழைக்கும் மக்களின் பாதிப்பை பற்றி கிஞ்சித்தும் கவலை இல்லாத ஒன்றிய அரசு, நவ தாராளமய கொள்கைகளை மாநிலங்கள் மீதும் திணிக்கிறது.

இத்தகைய மக்கள் விரோதப் போக்குகளை ஒன்றிய அரசு கைவிட வேண்டுமென தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசை வலியுறுத்த வேண்டும். மேலும், மாநில அரசு பொது விநியோக முறையை பலப்படுத்தி அனைத்து அத்தியாவசிய பொருட்களையும் மலிவு விலையில் அளிக்க நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த ஒன்றிய, மாநில அரசுகள் விரைவான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தி நவம்பர்3ஆம் தேதிசெவ்வாயன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் தீரன் சின்னமலை பேருந்து நிலையம் அருகிலும், உடுமலைப்பேட்டை, ஊத்துக்குளி ஆகிய பகுதிகளில் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி ஒதுக்குக!

தமிழ்நாட்டில் புதிய அரசுபொறுப்பேற்றிருக்கும் நிலையில்,நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்க வேண்டிய நிதி ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. இதனால்மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி ஆகிய நகர்ப்புற உள்ளாட்சிபகுதிகளில் மக்களின்அடிப்படைதேவையான பணிகள் முடங்கியுள்ளன. தமிழக அரசு உள்ளாட்சி அமைப்புகளை முடக்கக் கூடாது, மழைக்கால வெள்ளப்பெருக்கு அவசரதேவைகளுக்கு நிதி ஒதுக்கவேண்டும், ஒன்றிய அரசின் நிதி ஆணைய நிதியை உடனடியாக ஒதுக்க வேண்டும், மாநில நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டஉள்ளாட்சிகளுக்கான நிதியை உடனடியாக உள்ளாட்சி அமைப்புகளுக்குவழங்க வேண்டும். வார்டுகளில் செய்த பணிகளுக்கு உடனடியாக நிதியை முறையாக வழங்க வேண்டும், ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் வழங்க வேண்டிய உள்ளாட்சி நிதிகளை வழங்காமல் பட்டினி போட்டு உள்ளாட்சி ஜனநாயகத்தை பறிக்க கூடாது என வலியறுத்தி தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சிகள் முன்பாக நவப்பர் 17ஆம் தேதி போராட்டம் நடத்தமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாக திருப்பூர்மாவட்டத்தில் திருப்பூர் மாநகராட்சி, நகராட்சிகள் மற்றும் பேரூராட்சி பகுதிகளில் நிதி ஒதுக்கி வளர்ச்சி திட்டப்பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி நவம்பர் 17ஆம் தேதி இயக்கம் நடத்துவது என்றும் மாவட்டக்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.