தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வரி வாங்கும் மாநகராட்சி: கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சிபிஎம் போராட்டம்

13 Jul 2026, 10:28 pm
வரி வாங்கும் மாநகராட்சி: கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சிபிஎம் போராட்டம்
<p><strong>வரி வாங்கும் மாநகராட்சி: கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி சிபிஎம் போராட்டம்</strong></p><p>திருப்பூர், ஜூலை 13 - மக்களிடம் வரி வாங்கும் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் அடிப்படைக் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி மனு கொடுக்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலம்பாளையம் நகரக்குழு அனுப்பர்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகில் திங்களன்று ஆர்ப்பாட்டம் நடத்தி, முதல் மண்டல உதவி ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. குறிப்பாக வேலம்பாளையம் மயானத்தில் அடிப்படை வசதிகளை செய்து சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும், சிறுபூலுவபட்டி சாலையில் சிறுபாலம் கட்டி மழைநீர் கழிவுநீர் தேங்கும் பிரச்சனையை தீர்க்க வேண்டும், குழந்தைகளை அச்சுறுத்தும் தெரு நாய்கள் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும், ஆர்டிஓ அலுவலகம், காவிலிபாளையம் சாலை, சிறுபூலுவபட்டி, அனுப்பர்பாளையம் பகுதிகளில் குவித்து வைக்கப்பட்டு துர்நாற்றம் வீசும் குப்பையை அகற்ற வேண்டும், ஆறு வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் கழிவுநீர் வடிகால், குடிநீர், பாதாளச் சாக்கடை, குண்டும், குழியுமான சாலைகளைச் சீரமைப்பது, தெரு விளக்கு சீரமைப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கம் எழுப்பப்பட்டது. முன்னதாக இந்த போராட்டத்துக்கு நகரக்குழு உறுப்பினர் சின்னச்சாமி தலைமை ஏற்றார். கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலக்குழு உறுப்பினர் கே.காமராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ், நகரச் செயலாளர் ச.நந்தகோபால், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.கவிதா ஆகியோர் உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் மண்டல அலுவலகத்தில் உதவி ஆணையரிடம் மனுக் கொடுக்கப்பட்டது. இந்த போராட்டத்தில் கட்சியின் நகரக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் பங்கேற்றனர். ஏராளமான பெண்கள் உள்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.