திருப்பத்தூரில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்
21 Jun 2026, 1:34 am
<p><strong>திருப்பத்தூரில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்</strong></p><p>திருப்பத்தூர், ஜூன் 20- ஒன்றிய அரசின் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வலியுறுத்தியும், தொழிலாளர் சட்ட திருத்தங்களை திரும்ப பெறக்கோரியும் திருப்பத்தூர் சார் ஆட்சி யர் அலுவலகம் அருகில் சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் தாலுகா செயலாளர் காமராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில குழு உறுப்பினர் சிந்தன் சிறப்புரையாற்றினார். பெட்ரோல், டீசல், கேஸ் விலை உயர்வு, தொழிலாளர் சட்ட தொகுப்புகள் மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தைப் பாதிக்கும் வி.பி.ஜி.ராம் சட்டம் ஆகிய வற்றை ஒன்றிய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் காத்தவராயன், மாவட்ட குழு உறுப்பி னர்கள் ஜோதி, கேசவன், சிங்காரம், ஆனந்தன், வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
