விலைவாசி உயர்வைக் கண்டித்து நெல்லை மாவட்டத்தில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்
5 Nov 2026, 10:25 pm

விலைவாசி உயர்வைக் கண்டித்து நெல்லை மாவட்டத்தில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலி, நவ 5-அத்தியாவசிய பொருட்களின் விலைகளை உயர்த்திய ஒன்றிய-மாநில அரசுகளைக் கண்டித்தும் விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரியும் நெல்லை மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் 8 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நெல்லை மேலப்பாளையத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மேலப்பாளையம் பகுதிக்குழு செயலாளர் சாகுல் ஹமீதுதலைமை தாங்கினார். மாவட்டச்செயலாளர் க.ஸ்ரீராம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர். முருகன் ,பி.என்.இசக்கிமுத்து ஆகியோர் பேசினர்.

பாளையங்கோட்டை லூர்து நாதன் சிலை முன்பு நடைபெற்ற ஆர்பாட்டத்திற்கு மாவட்டக்குழு உறுப்பினர் முத்து சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். பாளையங்கோட்டை பகுதிக்குழு செயலாளர் ஆர்.மதுபால், மாவட்டக்குழுஉறுப்பினர் கு.பழனி ஆகியோர் விளக்கிப் பேசினர். மாநிலக்குழு உறுப்பினர்கே.ஜி.பாஸ்கரன் நிறைவுரையாற்றினார்.

நெல்லை டவுனில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டக்குழு உறுப்பினர் எல்.சரவணபெருமாள் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மோகன், திருநெல்வேலி தாலுகாச்செயலாளர் எஸ்.கே.செந்தில்,மாவட்டக்குழு உறுப்பினர் துரை நாராயணன் ஆகியோர் பேசினர்.ராதாபுரம் கமிட்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகாக்குழு உறுப்பினர் சோ சண்முகம் தலைமை தாங்கினார், கமிட்டி செயலாளர் முகமது பையாஸ் தொடங்கி வைத்து பேசினார். விவசாயிகள்சங்க மாவட்ட பொருளாளர் மாயகிருஷ்ணன் நிறைவுரையாற்றினார். பாப்பாக்குடி ஒன்றியம் முக்கூடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியக்குழு உறுப்பினர் ஜான் பாஸ்கர் தலைமை தாங்கினார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மோகன் துவக்கிவைத்துப் பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. மாரிச்செல்வம், ஒன்றிய செயலாளர் ஓ.அருணாசலம் ஆகியோர் விளக்கிப் பேசினர்.