பெட்ரோல், சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து திருவொற்றியூரில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்!
8 Jun 2026, 11:17 pm
<p><strong>பெட்ரோல், சிலிண்டர் விலை உயர்வைக் கண்டித்து திருவொற்றியூரில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்!</strong></p><p>தினசரி பெட்ரோல் விலையை உயர்த்தும் ஒன்றிய அரசைக் கண்டித்தும், சமையல் சிலிண்டர் விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவொற்றியூர் வடக்கு பகுதிக்குழு சார்பில் பாரத் நகரில் இன்று திங்கட்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்குப் பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல் தலைமை தாங்கினார். இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கே.ஆர்.முத்துசாமி, உமாகாந்தன், கே.வெங்கடையா, ராஜ்குமார், புஷ்பா, சுரேஷ், நாகராஜ், தேவிபாலா, க.அகல்யா, தனலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராகக் கோஷங்களை எழுப்பினர்.</p>
