தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

100 நாள் வேலைத் திட்ட முறைகேடு திருநாவலூரில் சிபிஎம் ஆர்ப்பாட்டம் பேச்சுவார்த்தைக்குப் பின் ஒத்திவைப்பு

18 Jul 2026, 12:02 am
100 நாள் வேலைத் திட்ட முறைகேடு  திருநாவலூரில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்  பேச்சுவார்த்தைக்குப் பின் ஒத்திவைப்பு
<p><strong>100 நாள் வேலைத் திட்ட முறைகேடு திருநாவலூரில் சிபிஎம் ஆர்ப்பாட்டம் பேச்சுவார்த்தைக்குப் பின் ஒத்திவைப்பு</strong></p><p>உளுந்தூர்பேட்டை, ஜூலை 17- திருநாவலூர் பகுதியில் நிலவும் பல்வேறு முறைகேடுகள் மற்றும் மக்கள் பிரச்சனைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்திருந்த கண்டன ஆர்ப்பாட்டம், அதிகாரிகளுடனான பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், திருநாவலூர் கிழக்கு ஒன்றியம், தேவியானந்தல் பகுதி யில் 100 நாள் வேலைத் திட்டத்தில் கடந்த 2 ஆண்டுகளாக முறைகேடு நடப்பதாக வும், அனைவருக்கும் வேலை வழங்கப்பட வில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், காமன் கோயில் தெருவில் குடிநீரில் கழிவுநீர் கலப்பது, பழுதான மின்மோட்டார், சாலை வசதி இன்மை, கலைஞர் கனவு இல்லத் திட்ட முறைகேடு, ஊராட்சி செயலாளர் லஞ்சம் கேட்பது, பள்ளியைத் தரம் உயர்த்துதல் உள்ளிட்ட 14 முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில் வரும் ஜூலை 20-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அறி விக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செந்தில் முருகன் மற்றும் நாராயணன் ஆகியோர் தலைமையில், கிராம ஊராட்சி மன்றத் தலைவர் முன்னிலையில் சமரசப் பேச்சு வார்த்தை நடைபெற்றது. இதில், முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவதாகவும், பழுதான நீர்த்தேக்கத் தொட்டியை 15 நாட்களுக்குள் சரிசெய்வதாகவும் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி நடைபெறவிருந்த கண்டன ஆர்ப்பாட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சியினர் தெரிவித்தனர். இந்த நிகழ்வில் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.அலமேலு, ஒன்றிய செயலாளர் ஜெ.ஜெயக்குமார், கிளை செயலாளர் ஆர்.முருகதாஸ், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் பி.வேல்முருகன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.