தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிபிஎம், தீ.ஒ.முன்னணி குடியேறும் போராட்டம் 230 குடும்பங்களுக்கு பட்டா வழங்க வட்டாட்சியர் உறுதி

30 Sept 2026, 11:28 pm
சிபிஎம், தீ.ஒ.முன்னணி குடியேறும் போராட்டம் 230 குடும்பங்களுக்கு பட்டா வழங்க வட்டாட்சியர் உறுதி

சிபிஎம், தீ.ஒ.முன்னணி குடியேறும் போராட்டம் 230 குடும்பங்களுக்கு பட்டா வழங்க வட்டாட்சியர் உறுதி

தேனி, செப்.30-தோழர் பி.சீனிவாசராவ் நினைவு நாளை முன்னிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் பட்டியலின மக்களுக்காக நடைபெற்ற குடியேறும் போராட்டத்தின் விளைவாக 230 குடும்பங்களுக்கு பட்டா வழங்க உத்தமபாளையம் வட்டாட்சியர் உறுதியளித்தார்.

கோம்பை வருவாய் கிராமத்தில் சர்வே எண்கள் 888/1, 888/2 மற்றும் 888/3 ஆகியவற்றில் 2.40 ஏக்கர் பஞ்சமி நிலத்தை சட்டவிரோதமாக வகை மாற்றம் செய்து வேறு பயன்பாட்டிற்கு கொண்டுசெல்ல திட்டமிட்டது. அந்த நிலத்தை மீண்டும், பஞ்சமி நிலமாக வகை மாற்றம் செய்து வீடு இல்லாத பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும் என கடந்த ஓர் ஆண்டாக போராடி வருகிறது. இதற்கு வருவாய்த்துறை செவி சாய்க்காத நிலையில் குடியேறும்போராட் டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,தீண்டாமை ஒழிப்பு முன்னணி திட்டமிட்டது.

ஊர்வலம்

அதன்படி புதன்கிழமை கோம்பை கிராம சாவடியிலிருத்து நில மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.லட்சுமணன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் எஸ்.சுருளிவேல் தலைமையில் 300-க்கும் மேற்பட் டோர் ஊர்வலமாக புறப்பட்டு குறிப்பிட்ட நிலத்தை நோக்கி குடியேற சென்றனர். தீண் டாமை ஒழிப்பு முன்னணிமாவட்டச் செயலாளர் ஜி.எம்.நாகராஜன் கோரிக்கையை விளக்கிப் பேசினார். சிபிஎம் தேனி மாவட்டச் செயலாளர்எம்.இராமச்சந்திரன் ஊர்வலத்தை தொடங்கி வைத்து பேசினார்.

பேச்சுவார்த்தை

உத்தமபாளையம் வட்டாட்சியர் பால சண்முகம், போடி காவல் துணைக் கண்காணிப்பாளர் முருகன் போராட் டத்தில் ஈடுபட்ட தலைவர்களுடன் பேச்சுவாரத்தை நடத்தினார். அப்போது வட்டாட்சியர் பாலசண்முகம், பஞ்சமி நிலத்தை முறைகேடாக அரசு நிலமாக வகை மாற்றம் செய் தது குறித்து தலைவர்கள் கேள்வி எழுப்பிய போது 2000 ஆம் ஆண்டுகளில் வகைமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதை மீண்டும் பஞ்சமி நிலமாக மாற்றம் செய்து நடவடிக்கை எடுக்கவும், வீட்டு மனை கேட்டு விண்ணப்பித்த 230 பேருக்கு அந்த நிலத்தில் வீட்டுமனை பட்டாவழங்கவும் உறுதியளித்தார். அதனைத் தொடர்ந்து போராட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இந்த போராட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை, சிபிஎம் ஏரியா செயலாளர் டி.கே.சீனி

வாசன், சிபிஎம் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் சி.முனீஸ் வரன், கே.ஆர்.லெனின், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.எம்.இப்ராகிம், என்.முத்துரத்தினம், தீண்டமை ஒழிப்பு முன்னணி மாவட்டக்குழு உறுப்பினர் பெருமாள்சாமி, சிபிஎம் ஏரியாக்குழு உறுப்பினர்கள் அம்சராஜ், ஆனந் தன், ஆண்டவர், காளிராஜ், விக்னேஷ்வரன், விவசாய சங்க தலைவர்கள் ஏ.செல்வராஜ், எஸ்.முத்துச்சாமி உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.