தேனியில் சிபிஎம் மனு கொடுக்கும் போராட்டம்
8 Jun 2026, 9:42 pm
<p><strong>தேனியில் சிபிஎம் மனு கொடுக்கும் போராட்டம்</strong></p><p>தேனி, ஜூன் 8- தேனி–அல்லிநகரம் நகராட்சிப் பகுதியில் குடிநீர், சுகாதாரம், புதிய பேருந்து நிலைய சீரமைப்பு உள் ளிட்ட அடிப்படை வசதிகளை மேம் படுத்த வலியுறுத்தியும், பல்வேறு பொதுநல கோரிக்கைகளை முன் வைத்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில், பொட்டல்களம் பகுதியில் அரசால் கட்டப்பட்டுள்ள வீடுகளை தலித் மக்களுக்கு இல வசமாக வழங்க வேண்டும், கொடு விலார்பட்டி காவக்கரடு ஊரணி மற் றும் அதன் கரைப்பகுதியில் இருந்து சட்டவிரோதமாக சுமார் 100 லோடு கிராவல் மண் அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மேலும், தனிநபருக்கு பூர்வீக சொத்துகள் இருந்தபோதும் அரசு நிலத்திற்கு வருவாய்த்துறை அதி காரிகள் அசைன்மெண்ட் பட்டா வழங்கியதாக குற்றம்சாட்டி, அந்த பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப் பட்டது. தேனி மாவட்ட ஆட்சியர் அலுவல கம் முன்பு நடைபெற்ற போராட்டத் திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தேனி தாலுகா செயலாளர் இ. தர்மர் தலைமை வகித்தார். போராட்டத்தில் மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் டி.கண்ணன், கே.எஸ்.ஆறுமுகம், முன்னாள் மாவட்டச் செயலாளர் ஏ.வி.அண்ணாமலை, முன்னாள் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சி.முருகன், மாவட்டக் குழு உறுப்பினர் என்.முத்துரத்தினம், தாலுகா குழு உறுப் பினர் எம்.காமுத்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கை களை வலியுறுத்தினர். பின்னர், கோரிக்கைகள் அடங் கிய மனு மாவட்ட நிர்வாகத்திடம் வழங்கப்பட்டது.</p>
