தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

பினராயி விஜயன் வீட்டில் அராஜக சோதனை ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து புளியங்குடி, கடையத்தில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

31 May 2026, 10:14 pm
பினராயி விஜயன் வீட்டில் அராஜக சோதனை  ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து  புளியங்குடி, கடையத்தில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்
<p><strong>பினராயி விஜயன் வீட்டில் அராஜக சோதனை ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து புளியங்குடி, கடையத்தில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்</strong></p><p>தென்காசி, மே 31- கேரள முன்னாள் முதலமைச்சரும் சிபிஎம் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான பினராயி விஜயன் வீட்டில் ஒன்றிய பாஜக அரசின் ஏவல்துறையான அமலாக்கத்துறையின் அராஜக சோதனையை கண்டித்தும் அதற்கு எதிராகப் போராடிய சிபிஎம் தலைவர்களை கைது செய்த தில்லி போலீசாரைக் கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் தென்காசி மாவட்டம் புளியங்குடி, கடையம் ஆகிய பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. புளியங்குடியில், காமராஜர் சிலை அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு நகரச் செயலாளர் மாரியப்பன் தலைமை வகித்தார். நகர்க்குழு உறுப்பினர் முருகையா எஸ்.கே.சீனி பாண்டியன், கே.பி.மாரியப்பன், பி.எம்.மோகன் ஆகியோர் பேசினர். மாவட்ட செயலாளர் உச்சிமாகாளி நிறைவுரையாற்றினார். கடையம் ஒன்றியத்தில் சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டக்குழு உறுப்பினர் மணிகண்டன் பேசினார். மாவட்ட செற்குழு உறுப்பினர் அயூப்கான் நிறைவுரையாற்றினார். ஒன்றிய செயலாளர் மேனகா, ஒன்றியக்குழு உறுப்பினர் முத்துராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.