முந்தய பக்கம்

தென்காசியில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

29 May 2026, 11:04 pm
தென்காசியில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்
<p><strong>தென்காசியில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்</strong></p><p>தென்காசி, மே. 29- கேரளத்தின் முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கதுறை சோதனை நடத்தியதையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி யையும், அரசியல் தலைமை குழு உறுப்பினர்களையும் தாக்கி கைது செய்த மோடி அரசின் தில்லி காவல்துறையையும் கண்டித்து செங்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி நகர கிளைச் செயலாளர் ராஜகோபால் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் பி.உச்சிமாகாளி, கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர்கள் ஆயிஷா பேகம், பால்ராஜ் மற்றும் தாலுகா செயலாளர் வேலுமயில் ஆகியோர் உரையாற்றினர் . வாசுதேவநல்லூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் வாசுதேவநல்லூர் ஒன்றியச் செயலாளர் இரா. நடராஜன் தலைமை தாங்கினார் . ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் மா.சுப்புலட்சுமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கீழப்பாவூர் ஒன்றியம் பாவூர்சத்திரம் பேருந்து நிலையம் முன்பு ஒன்றிய செயலாளர் எம்.தங்கம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் குணசீலன். உரை ஆற்றினார். இடைகமிட்டி உறுப்பினர்கள் ,அரியப்பபுரம் கிளை செயளாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram