விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த ஒன்றிய - மாநில அரசுகளுக்கு கோரிக்கை தமிழகம் முழுவதும் சிபிஎம் ஆர்ப்பாட்டம்!
3 Nov 2026, 10:29 pm

விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த ஒன்றிய - மாநில அரசுகளுக்கு கோரிக்கை தமிழகம் முழுவதும் சிபிஎம் ஆர்ப்பாட்டம்!

சென்னை, நவ. 3 -விலைவாசி உயர்வு, மக்களின் அன்றாட வாழ்க்கையைக் கடுமையாகப் பாதித்து வரும்நிலையில், அதனைக் கட்டுப்படுத்த ஒன்றிய - மாநில அரசுகள் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

சமையல் எரிவாயு சிலிண்டர், காய்கறிகள் மற்றும் மளிகைப் பொருட்களின் விலைவாசி, மக்களுக்கு எட்டாத உயரத்திற்கு சென்று கொண்டிருப்பது, இந்த ஆர்ப்பாட்டங்களில் நூதனவழிகளில் காட்சிப்படுத்தப்பட்டது டன், ஆட்சியாளர்கள் விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்திமுழக்கங்களும் எழுப்பப்பட்டன.

தமிழ்நாட்டில் சில்லரை விலைபணவீக்கம் 6.81 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அரிசி, பருப்பு, சர்க்கரை, காய்கறி மற்றும் அன்றாட பயன்பாட்டுப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. ஜி.எஸ்.டி.வரிவிதிப்பு, ஆன்லைன் வணிகம்,பதுக்கல் ஆகியனவும் விலை உயர்வுக்கான காரணங்களாக உள்ளன. ரேசனில் வழங்கப்படும் அரிசியின் தரமும் குறைவாக இருப்பதால் மக்கள் வெளிச்சந்தை நோக்கித் தள்ளப்பட்டு வருகின்றன. ஆனால், உணவுப் பொருள் பணவீக்கம் தமிழ்நாட்டில் 10.62 சதவிகிதமாக உயர்ந்திருப்பதும், வருமானத்தில் பெரும்பகுதியை உணவுக்காக செலவழிப்பது எளிய - நடுத்தர மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் சிரமத்தை ஏற்படுத்தியுள் ளது. ஏற்கெனவே ஊட்டச் சத்துக்குறைபாடானது பெண்களை, குழந்தைகளை கடுமையாகப் பாதித்துள்ள நிலையில், உணவுப்பொருள் விலை உயர்வு பிரச்சனையை மேலும் தீவிரமாக்குவ தாக மாறியுள்ளது.

தமிழ்நாட்டில் 25 சதவிகிதம்அரிசி ஆலைகள் இயங்க முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள் ளன. எத்தனால் உற்பத்திக்கு அரிசி, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் மடைமாற்றம் செய்யப்படு வதும் உணவுப் பாதுகாப்பில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

எனவே, ஒன்றிய - மாநிலஅரசுகள், விலைக் கட்டுப்பாட்டுக் கான நடவடிக்கைகளை மேற் கொள்வதோடு, உணவுப் பொருளான அரிசியை எத்தனால்உற்பத்திக்குப் பயன்படுத்து வதைத் தடுத்து மக்களின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்; பொது விநியோக முறையை வலுப்படுத்த வேண்டும்; ஒவ்வொரு குடும்பத்திற் கும் மாதம் 35 கிலோ அரிசிவழங்குவதுடன், அனைத்து அத்தியாவசிய பொருட்களை யும் மலிவு விலையில் வழங்குவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

மதுரை

மதுரையில், செல்லூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பகுதிக்குழு செயலாளர் வி. கோட்டைச்சாமி தலைமை வகித்தார். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம், கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மதுரை மாநகராட்சி (பொறுப்பு) மேயர் தி. நாகராஜன்,மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர். சசிகலா, மாவட்டக்குழு உறுப்பினர் ஆர். லதா ஆகியோர் பங்கேற்று உரையாற்றினர்.

திண்டுக்கல்

திண்டுக்கல் நாகல் நகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், திண்டுக்கல் மக்களவை உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம், மாவட்டச் செயலாளர் கே.பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.மாநகரச் செயலாளர் ஏ. அரபு முகமது, ஒன்றியச் செயலாளர் ஆர். சரத்குமார், போக்குவரத்து இடைக்கமிட்டிச்செயலாளர் பி. வெள்ளைத்தண்டி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ஆர்.பாலாஜி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே.எஸ். கணேசன், டி. பாக்கியம், ஜி. வெங்கிடுசாமி, தீபக் ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

திருப்பூர்

விலைவாசி உயர்வை கண்டித்து, திருப்பூர் தீரன் சின்னமலை பேருந்து நிலையம் முன்பாக நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாநகர முதலாவது மேற்கு மண்டலச் செயலாளர் ச.நந்தகோபால் தலைமை ஏற்றார். மாநிலக்குழு உறுப்பினர்கள் கே.காமராஜ், தௌ.சம்சீர் அகமது,மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.