ஏழை - நடுத்தரக் குடும்பங்களின் மீது தாக்குதல் நடத்தும் ஒன்றிய பாஜக அரசு விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி தமிழகத்தில் 300 இடங்களில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்!
19 Jun 2026, 8:42 pm

ஏழை - நடுத்தரக் குடும்பங்களின் மீது தாக்குதல் நடத்தும் ஒன்றிய பாஜக அரசு விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தக் கோரி தமிழகத்தில் 300 இடங்களில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்!

சென்னை, ஜூன் 19 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வெள்ளிக்கிழமை (ஜூன் 20) அன்று தமிழகம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட மையங்களில் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட் களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், தொழிலாளர் விரோத 4 சட்டத் தொகுப்புகளைத் திரும்பப் பெற வேண்டும், ‘விபி ஜி ராம் ஜி’ திட்டத்தைக் கைவிட்டு, மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டத்தை மீண்டும் கொண்டு வருவதோடு, தினக்கூலி யை 700 ரூபாயாக உயர்த்த வேண்டும் என நரேந்திர மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்தி, இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

இதில், பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு, மோடி அரசின் விலை உயர்வு நடவடிக்கைகளுக்கு எதிராக கண்டனம் முழங்கினர்.

கே. பாலகிருஷ்ணன்

கட்சியின் மத்திய சென்னை மாவட்டக்குழு சார்பில் பிராட்வேயில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் கே. பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். மத்தியசென்னை மாவட்டச் செய லாளர் ஜி.செல்வா தலைமை தாங்கி னார். செயற்குழு உறுப்பினர்கள் சி. திருவேட்டை, ஆர். முரளி, இ. சர்வேசன், எஸ்.கே. முருகேஷ், எஸ்.வி. வேணுகோபாலன், வே. ஆறுமுகம், துறைமுகம் பகுதிச் செயலாளர் ஆர். குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உ. வாசுகி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில், தஞ்சாவூர் ரயிலடி தலைமை அஞ்சல் நிலையம் அருகே கட்சியின் மாநகரச் செயலாளர் எம். வடிவேலன் தலைமையில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ. வாசுகி கலந்து கொண்டு கண்டன உரை யாற்றினார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி. செந்தில்குமார், என்.வி. கண்ணன், எஸ். தமிழ்ச் செல்வி, எஸ். செல்வராஜ், என். சரவ ணன், எம். செல்வம், கே. அபிமன்னன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே. பக்கிரிசாமி, ஏ. நம்பிராஜன், என். குருசாமி, களப்பிரன், இ. வசந்தி, துரை. ஏசுராஜா, பி. கலைச்செல்வி, சி. சரிதா ஏ. அருணாதேவி, டி. கஸ்தூரி, ஆ. பிரதீப் ராஜ்குமார், ஒன்றியச் செய லாளர்கள் எஸ். கோவிந்தராஜ் (ஒரத்த நாடு), சி. பாஸ்கர் (பூதலூர் தெற்கு), ஏ.ராஜா (திருவையாறு), எஸ். கோவிந்தராசு (தஞ்சாவூர்), வி. ரவி (அம்மாப்பேட்டை), பி. முருகேசன் (பூதலூர் வடக்கு) மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

பெ. சண்முகம்

திருவாரூர் பழைய பேருந்து நிலை யம் அருகில், மாவட்டச் செயலாளர் டி. முருகையன் தலைமையில் நடை பெற்ற பெருந்திரள் கண்டன ஆர்ப்பா ட்டத்தில், கட்சியின் மாநிலச் செயலா ளர் பெ. சண்முகம் சிறப்புரையாற்றி னார். மாநிலக்குழு உறுப்பினர் ஐ.வி. நாகராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி. சுந்தரமூர்த்தி, எம். சேகர், பி. கந்தசாமி, பா. கோமதி மற்றும் மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்று கண்டன முழக்கங்களை எழுப்பினர்.