விலைவாசி உயர்வைக் கண்டித்து தமிழகத்தில் 300 மையங்களில் சிபிஎம் இன்று ஆர்ப்பாட்டம்!
18 Jun 2026, 10:03 pm

விலைவாசி உயர்வைக் கண்டித்து தமிழகத்தில் 300 மையங்களில் சிபிஎம் இன்று ஆர்ப்பாட்டம்!

சென்னை, ஜூன் 18 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று (ஜூன் 19) தமிழகம் முழு வதும் 300க்கும் மேற்பட்ட மையங்களில் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.

ஒன்றிய பாஜக அரசின் வணிக மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு, பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, தொழி லாளர்களுக்கு எதிரான நான்கு தொழி லாளர் தொகுப்புச் சட்டம் அமலாக்கம், 100 நாள் வேலை உறுதிச் சட்டத்தை சிதைக்கும் ‘விபி ஜி ராம் ஜி’ திட்டம் உள்ளிட்டு மோடி அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோதக் கொள்கைகளை கண்டித்து இந்த ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.

கே. பாலகிருஷ்ணன்

சென்னையில் குறளகம் அருகில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் ஆர்ப்பா ட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் கே. பாலகிருஷ்ணன், தாம்பரம் சண்முகம் சாலையில் மாலை 5 மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத், வடசென்னை சர்மா நகரில் காலை 9.30 மணிக்கு நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மாநில செயற்குழு உறுப்பினர் எஸ். கண்ணன் ஆகியோர் கண்டன உரையாற்று கின்றனர்.

உ. வாசுகி - பெ. சண்முகம்

மாநிலத்தின் இதர பகுதிகளைப் பொறுத்தவரை, மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் திருவாரூரிலும், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் உ. வாசுகி தஞ்சாவூரிலும், மத்தியக்குழு உறுப்பினர் கே. பாலபாரதி விருதுநகரிலும், மத்திய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஜி. ராம கிருஷ்ணன் திருச்சியிலும், மாநில செயற்குழு உறுப்பினர்கள் க. கனகராஜ் கோவையிலும், மதுக்கூர் இராமலிங்கம் மதுரையிலும், என். பாண்டி புதுக்கோட்டை யிலும், ஜி. சுகுமாறன் கடலூரிலும், டி. ரவீந்திரன் திண்டுக்கல்லிலும், செ. முத்துக்கண்ணன் தர்மபுரியிலும், க. சுவாமி நாதன் காஞ்சிபுரத்திலும், கே. அர்ச்சுணன் தூத்துக்குடியிலும், ஆர். சச்சிதானந்தம் எம்.பி., தேனியிலும் மற்றும் இதர மையங் களில் மாநிலக்குழு உறுப்பினர்களும், மாவட்டச் செயலாளர்களும் ஆர்ப்பாட்டத் தில் பங்கேற்று கண்டன உரையாற்றுகின்றனர்.