தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சிபிஎம் போராட்டத்திற்கு வெற்றி: ஆதிதிராவிடர் குடியிருப்புக்கு புதிய மின்மாற்றி

24 May 2026, 2:17 am
சிபிஎம் போராட்டத்திற்கு வெற்றி: ஆதிதிராவிடர் குடியிருப்புக்கு புதிய மின்மாற்றி

சிபிஎம் போராட்டத்திற்கு வெற்றி: ஆதிதிராவிடர் குடியிருப்புக்கு புதிய மின்மாற்றி

உளுந்தூர்பேட்டை, மே 23- உளுந்தூர்பேட்டை வட்டம், பூமாம்பாக்கம் கிராமத்தில் உள்ள ஆதி திராவிடர் குடியிருப்பில் வசிக்கும் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், கடந்த பல ஆண்டுகளாகக் குறைந்த மின்னழுத்த பிரச்சினையால் பெரிதும் அவதிப்பட்டு வந்தன. இந்தக் குறைந்த மின்னழுத்தக் குறை பாடு காரணமாகத் தொலைக்காட்சி, மிக்ஸி, ஃபிரிட்ஜ் போன்ற அத்தியாவசிய மின்னணு சாதனங்களை இயக்க முடி யாமல் அப்பகுதி மக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இதனைத் தொடர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கிராமப் பொதுமக்களைத் திரட்டிப் பலகட்டப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. மேலும், மின்வாரிய அதிகாரிகளுடனும் தொடர் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப் பட்டன. பொதுமக்களின் இந்த நியாயமான தொடர் கோரிக்கையை ஏற்று, உளுந்தூர் பேட்டை உதவி மின் பொறியாளர் முருகன், உதவிச் செயற்பொறியாளர்கள் சிவராமன் மற்றும் ஐயம்பெருமாள் ஆகியோரின் தீவிர முயற்சியால், பூமாம்பாக்கம் ஆதி திராவிடர் குடியிருப்புப் பகுதிக்குத் தற்போது புதிய மின்மாற்றி (Transformer) அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. பல ஆண்டு காலப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டு, புதிய மின்மாற்றி அமைத்துத் தந்த மின்வாரிய அதிகாரிகளுக்குக் கிராமப் பொதுமக்கள் சார்பிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் நெஞ்சார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்வதாக அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.