குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி சிபிஎம் போராட்டம்
1 hour before
<p><strong>குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி சிபிஎம் போராட்டம்</strong></p><p>சிவகாசி, ஜூலை 1- சிவகாசி ஒன்றியத்திற்கு உட்பட்டது விஸ்வநத்தம், அனுப்பங்குளம், ஆனை யூர், பள்ளபட்டி, நாராணாபுரம் ஊராட்சி கள். இங்கு 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் ஒரு லட்சத்திற்கும் அதி கமானோர் வசித்து வருகின்றனர். ஆனால், இப்பகுதிகளில் குடிநீர், சாலை, சுகாதாரம் உள்ளிட்ட வசதிகள் சரிவர செய்து தரப்பட வில்லை. எனவே, இதனைக் கண்டித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு மாநகர் செயலாளர் ஆர்.சுரேஷ்குமார் தலைமையேற்றார். துவக்கி வைத்து மாவட்டக்குழு உறுப்பினர் பி.பாலசுப்பிர மணியன் பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.என்.தேவா கண்டன உரை யாற்றினார். வட்டார வளர்ச்சி அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது.</p>
