தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்திடுக! சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்

20 Jun 2026, 11:13 pm
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்திடுக! சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்
<p><strong>அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்திடுக! சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்</strong></p><p>இராமநாதபுரம், ஜூன் 20- சமையல் எரிவாயு, பெட் ரோல், டீசல் உள்ளிட்ட அத்தி யாவசியப் பொருட்களின் விலை உயர்வை கட்டுப் படுத்திட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரி க்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளிக் கிழமை தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொழிலாளர் விரோத நான்கு சட்டத் தொகுப்பு களை திரும்பப் பெற வேண் டும், கிராமப்புற 100 நாள் வேலைத் திட்டத்தை மீண் டும் “மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம்” என்ற பெயரில் மீண்டும் செயல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. அதனொரு பகுதியாக, இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் தாலுகா குழு உறுப்பினர் வி.அருள் சாமி தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் மாவட்டச் செயலா ளர் ரெ.குருவேல், தாலுகாச் செயலாளர் கே.ஜெயகாந் தன், மாவட்ட குழு உறுப்பி னர் எஸ்.ஏ.சந்தானம், தாலுகா குழு உறுப்பினர் ஆர்.சேதுராமு ஆகியோர் கண்டன உரையாற்றினர். மேலும், மாதர் சங்க தாலுகா செயலாளர் ஜோதி, ஈ.பி.எப்.-95 ஓய்வூதியம் பெறுவோர் நலச்சங்க மாவட்டத் தலைவர் ஷாஜ கான், மூத்த தலைவர்கள் கே. ரத்தினம், என்.வி.கருப் பையா, கே.முருகன், அஞ்சு கோட்டை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் வி.பூபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். சிக்கலில் தாலுகா குழு உறுப்பினர் டி.நம்புராஜன் தலைமையில் நடைபெற் றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.மயில்வாக னன், தாலுகாச் செயலாளர் எஸ்.ராமசாமி, தாலுகா குழு உறுப்பினர்கள் சுப்பிரமணி யன், ஜெயக்குமார், ராமாயி, வாலிபர் சங்க தாலுகா செய லாளர் அபுபக்கர் சித்திக், நிர் வாகி அப்துல்லா, மாற்றுத் திறனாளிகள் சங்க தாலுகா தலைவர் முகமது சுல்தான் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். திருஉத்திர கோசமங்கை யில் கீழக்கரை தாலுகாச் செயலாளர் எஸ்.முரு கேசன் தலைமையில் நடை பெற்றது. விவசாயிகள் சங்க மாநில துணைத் தலைவர் எம்.முத்துராமு துவக்க உரையாற்றினார். மூத்த தோழர் கே.பழனிச்சாமி கண்டன உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப் பினர் எம்.ராஜ்குமார் சிறப்பு ரையாற்றினார். தாலுகா குழு உறுப்பினர்கள் கே.முனி யாண்டி, எம்.கருப்பசாமி, எம்.பாலு, வி.சியாம் சுந்தர் மற் றும் பலர் கலந்து கொண்டனர். உச்சப்புளியில் இராம நாதபுரம் தாலுகா குழு சார்பாக கிளைச் செயலா ளர் கே.சுந்தரம் தலைமை யிலும், கே.முனியசாமி முன் னிலையிலும் நடைபெற் றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.கண்ணகி துவக்க உரையாற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர் கள் பி.செல்வராஜ், பி. கல்யாணசுந்தரம், தாலுகா குழு உறுப்பினர் எஸ்.பி.பூமி நாதன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். சிவாஜி நிறைவுரையாற்றி னார். மாவட்டச் செயலா ளர் எஸ்.வெங்கடசுப்பிர மணியன், கட்டுமான சங்க தலைவர் ஆர்.வாசுதேவன், மாதர் சங்க தாலுகாச் செய லாளர் சசிகலா மற்றும் பலர் கலந்து கொண்டனர். சத்திரக்குடியில் வட்டார குழு உறுப்பினர் போஸ் தலைமையில் நடைபெற் றது. இதில் மாவட்ட செயற் குழு உறுப்பினர் தி.ராஜா, வட்டாரச் செயலாளர் இ.க. தட்சிணாமூர்த்தி, வட்டாரக் குழு உறுப்பினர்கள் ஆறு முகம், முருகன், ஆரோக்கி யம், ஓய்வு பெற்றோர் அமை ப்பின் நிர்வாகி முருகபூபதி ஆகியோர் கண்டன உரை யாற்றினர். அபிராமத்தில் கமுதி தாலுகா குழு சார்பாக பி. பொன்னுச்சாமி தலைமை யில் நடைபெற்றது. மாவட்ட செயற்குழு உறுப்பினர் வி.காசிநாததுரை, மாவட்டக் குழு உறுப்பினர்கள் இரா. முத்துவிஜயன், வி.முரு கன், முன்னாள் தாலுகாச் செயலாளர் கே.முனியசாமி, தாலுகா குழு உறுப்பினர் பி.கே.முனியசாமி, கிளைச் செயலாளர்கள் எஸ்.கும ரேசன், கே.வீரய்யா, எஸ்.வி. கருப்பையா ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாதர் சங்க நிர்வாகி அ.ஆண்டாள், வெள்ளத் துரை, பி.அங்குதன், முரு கேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.