பெட்ரோல் டீசல் விலை உயர்வு கண்டித்து புதுச்சேரியில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்
20 May 2026, 1:05 am
<p><strong>பெட்ரோல் டீசல் விலை உயர்வு கண்டித்து புதுச்சேரியில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்</strong></p><p>புதுச்சேரி, மே 19- பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற கோரி மார்க்சிஸ்ட கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றிய பாஜக அரசு பெட்ரோல் டீசல் லிட்டர் ஒன்றுக்கு ரூ.4 வரை உயர்த்தி உள்ளதை கண்டித்தும், சமையல், கேஸ் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெறவேண்டும். நீட் வினாத்தாளை கசியவிட்ட ஒன்றிய அரசின் கல்வித்துறை அமைச்சர் உடனே பதவி விலக வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி மதகடிப்பட்டு நான்கு முனை சந்திப்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சிபிஎம் மண்ணாடிபட்டு கமிட்டி செயலாளர் ரகு.அன்புமணி தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் ராஜாங்கம், மாநில குழு உறுப்பினர் சங்கர், கமிட்டி உறுப்பினர்கள் விநாயகம்,முத்து, ரகுநாத், நாகராஜ், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மண்ணாடிப்பட்டு கமிட்டி செயலாளர் ராமலிங்கம், மற்றும் கிளை செயலாளர்கள் பாரதி, மதுரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.</p>
