தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஒன்றிய பாஜக அரசின் சர்வாதிகாரத்தைக் கண்டித்து புதுச்சேரியில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்!

21 Jul 2026, 12:04 am
ஒன்றிய பாஜக அரசின் சர்வாதிகாரத்தைக் கண்டித்து புதுச்சேரியில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்!
<p><strong>ஒன்றிய பாஜக அரசின் சர்வாதிகாரத்தைக் கண்டித்து புதுச்சேரியில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்!</strong></p><p>புதுச்சேரி, ஜூலை 20- சமூக ஆர்வலர் சோனம் வாங்சுவை ஒன்றிய பாஜக அரசு கைது செய்ததை கண்டித்து சிபிஎம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நீட் தேர்வு முறைகேட்டுக்கு பொறுப் பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக கோரி, தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் வலுக்கட்டாயமாகக் ஒன்றிய பாஜக அரசு கைது செய்துள்ள சம்பவத்தை கண்டித்து போராட்டம் நடைபெற்றது. புதுச்சேரி நேரு வீதியில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். மூத்த தலைவர் முருகன்,மாநில செயற்குழு உறுப்பினர்கள் சுதா, ராஜாங்கம், பெருமாள்,கொளஞ்சியப்பன், கலியமூர்த்தி, சத்தியா, இடைக்குழு செயலாளர்கள் ஜோதிபாசு, ராம்ஜி, சரவணன், ராமமூர்த்தி, அன்புமணி மாநிலக்குழு உறுப்பினர்கள் உட்பட திரளா னோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். முன்னதாக கண்டன பதாகைகள் ஏந்தி ஒன்றிய பாஜக அரசை எதிர்த்து கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.