தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

அமைச்சர், அதிகாரிகள் உறுதியளிப்பு சிபிஎம் ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு!

7 Jun 2026, 12:22 am
அமைச்சர், அதிகாரிகள் உறுதியளிப்பு சிபிஎம் ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு!

அமைச்சர், அதிகாரிகள் உறுதியளிப்பு சிபிஎம் ஆர்ப்பாட்டம் ஒத்திவைப்பு!

அவிநாசி, ஜூன் 6- அவிநாசி அருகே புஞ்சை தாமரைக்குளம் ஊராட்சியில் குடிநீர் வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தி ருந்த கண்டன ஆர்ப்பாட் டம், அமைச்சர் மற்றும் அதி காரிகளின் சமரசப் பேச்சு வார்த்தையை அடுத்து தற் காலிகமாக ஒத்திவைக்கப் பட்டுள்ளது.

இவ்ஊராட்சிக்குட்பட்ட ஆதராம்பாளை யம், நமச்சிபாளையம், புஞ்சை தாமரைக் குளம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாத காலமாக நல்ல தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை.

இதுகுறித்து அதிகாரிக ளிடம் பலமுறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், சிபிஎம் சார்பில் ஜூன் 8-ஆம் தேதி மக்களைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது.

கடந்த மூன்று நாட்களாக வீடு வீடாகச் சென்று துண்டுப் பிரசுரங்களும் விநியோகிக்கப் பட்டன.

இதையடுத்து சனியன்று, வட்டார வளர்ச்சி அலுவலர், மண்டல அலுவலர், குடி நீர் வடிகால் வாரிய உதவிப் பொறியாளர் மற் றும் ஊராட்சியின் தனி அலுவலர் ஆகி யோர் சிபிஎம் நிர்வாகிகளுடன் அவசரப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

போராட்டம் அறி விக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த இரண்டு நாட்களாக அப்பகுதிகளுக்கு குடிநீர் விநி யோகம் செய்யப்பட்டு வரும் நிலையில், அடுத்த 15 நாட்களுக்குள் அனைவருக்கும் தங்குதடையின்றி குடிநீர் வழங்க முழு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இதற்கிடையே, ஊராட்சியில் ஆய்வுக்கு வந்த கால்நடை பராமரிப்புத் துறை அமைச் சர் கமலியும், குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என நேரில் உறுதியளித்தார்.

இதனை ஏற்று, சிபிஎம் அறிவித்திருந்த ஆர்ப்பாட்டம் தற் காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இப்பேச்சு வார்த்தையில் சிபிஎம் மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.பழனிச்சாமி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் என்.கருப்புசாமி, கே.குமார சாமி, கட்சி நிர்வாகிகள் முருகன், பழனிச்சாமி, ராமசாமி, நடராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.