இரவு நேர மருத்துவரை நியமிக்கக்கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்
14 Jul 2026, 10:40 pm
<p><strong>இரவு நேர மருத்துவரை நியமிக்கக்கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்</strong></p><p>திருப்பூர், ஜூலை 14 - திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அரசு மருத்துவமனையில் இரவு நேரங்களில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நிய மிக்க வலியுறுத்தியும், அடிப்படை வசதி களை மேம்படுத்தக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சார்பில் செவ்வா யன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பொங்கலூர் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க் சிஸ்ட் கட்சியின் சக்தி நகர் கிளைச் செயலா ளர் முருகேசன் தலைமை வகித்தார். இப் போராட்டத்தில், பொங்கலூர் அரசு மருத்துவ மனையில் இரவு நேர சிகிச்சைக்காக மருத்து வர்கள் மற்றும் செவிலியர்களை பணிய மர்த்த வேண்டும், மருத்துவமனையின் பாது காப்பை உறுதிப்படுத்த இரவு காவலாளியை நிய மிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக் கப்பட்டன. அத்துடன், அப் பகுதியில் உள்ள சக்தி நகர் மற்றும் அம்மன் நகர் குடி யிருப்புகளில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டைப்போக்கி, தடையற்ற குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பவித்ரா தேவி, ஒன்றியச் செயலாளர் ஆர்.பாலன், பொங்கலூர் கிளைச் செயலாளர் சுந்தரம், மகாஜனபுரம் கிளைச் செயலாளர் சண்முகம், மாதர் சங்க ஒன்றியச் செயலாளர் நிஷா ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். மார்க்சிஸ்ட் கட்சியினரோடு அப் பகுதி பொதுமக்களும் திரளானோர் பங் கேற்றனர். முடிவில் பொங்கலூர் கிளை சார் பில் கருணாநிதி நன்றி கூறினார்.</p>
