சிபிஎம் போராட்ட எதிரொலி சாலை அமைக்க அதிகாரிகள் உறுதி
29 Oct 2026, 11:40 pm

சிபிஎம் போராட்ட எதிரொலி சாலை அமைக்க அதிகாரிகள் உறுதி

திருவண்ணாமலைஅக் 29-திருவண்ணாமலை மாவட்டம், போளூர் வட்டம், சந்தவாசல் கிராமம் படவேடு சாலையில் உள்ள பிள்ளையார் கோவிலிலிருந்து பிரிந்து செல்லும் மண் சாலை, ஜடகொண்டாபுரம், சகாய புரம், மங்களாபுரம், துரிஞ்சாபுரம், பெருமாள் பேட்டை வழியாக செண்பக தோப்பு நீர்தேக்கம் வரை செல்கிறது.

வனத்துறை பகுதியில் உள்ள அந்த மண் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள், விவசாய எந்திரங்கள், இருசக்கர வாகனங்கள் செல்ல சிரம மாக உள்ளது. குறிப்பாக மழைக்காலத்தில் சேறும் சகதியமாக இருப்பதால் அப்பகுதி மக்கள் ஆபத் தான பயணம் செய்து வரு கின்றனர்.

எனவே, உடனடியாக போர்கால அடிப்படையில தார்சாலை அமைக்க கோரி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் வியாழனன்று (ஆக். 29) போராட்டம் நடத்த திட்டமிடப் பட்டது.

இதற்காக கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் ஆகியோர் சந்தவாசல் சி.சி. சாலை அருகே ஒன்று திரண்டனர்.

சந்தவாசல் வனச்சரக அலுவலகம் வரை ஊர்வல மாக செல்ல திட்டமிட்டனர். இந்தப் போராட்டத்திற்கு மா.ஜெயசீலன் தலைமை தாங்கினார், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம். வீர பத்திரன், வட்டார செய லாளர் இரா. இரவி தாசன், மாவட்ட குழு உறுப்பினர் சிவாஜி, நகர செயலாளர் ப.கிருஷ்ணமூர்த்தி, கரும்பு சங்க நிர்வாகி பாலமுருகன், விவசாயிகள் சங்க நிர்வாகி அ.உதயகுமார், வட்ட நிர்வாகிகள் வெங்கடேசன், இரவிராஜ், சரவணன், அஞ்சலி, எஸ்.எஸ். வாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகளுடன், வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் பேச்சு நடத்தினர்.

அப்போது கூடிய விரை வில் சாலை பணிகள் துவங் கும் என்றும், அதற்கு உண்டான டெண்டர் விடப் பட்டுள்ளது எனவும் எழுத்துப்பூர்வமாக எழுதி, மார்க்சிஸ்ட் கட்சிநிர்வாகிகளிடம் அளித்ததன் அடிப்படையில் போராட் டம் விலக்கிக் கொள்ளப் பட்டது.