முதல்வர் தொகுதியில் மின்வெட்டு பெரம்பூரில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்
13 Aug 2026, 12:36 am

முதல்வர் தொகுதியில் மின்வெட்டு பெரம்பூரில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

சென்னை, ஆக. 3-பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வியாசர்பாடி, சர்மா நகர், எம்கேபி. நகர், கொடுங்கையூர் உள்ளிட்ட பல பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது.

இதனால் பொதுமக்கள் இரவு நேரங்களில் மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு வருகின்றனர். சில இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடைபெறுகிறது.

இந்நிலையில் மின்வெட்டை கண்டித்தும், கடுமையான மின் கட்டண உயர்வை திரும்ப பெறக் கோரியும் சிபிஎம் சார்பில் பெரம்பூர் சர்மா நகர் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே பகுதிச் செயலாளர் அ.விஜயகுமார் தலைமையில் திங்களன்று (ஆக. 3) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் மாநிலக்குழு உறுப்பினர் எல்.சுந்தர்ராஜன், மாவட்டக் குழு உறுப்பினர் ராஜ்குமார், நிர்வாகிகள் பிரமிளா, ஜீவா முனுசாமி, சேகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து எல்.சுந்தரராஜன் செய்தி யாளர்களிடம் கூறுகையில், பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல இடங்களில் இரவு நேரங்களில் தொடர்ச்சி யாக மின்வெட்டு ஏற்படுகிறது. கடும் வெப்பம் நிலவும் சூழ்நிலையில் இவ்வாறு மின் தடை ஏற்படுவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே மின் தடையை சரி செய்ய மின்வாரிய நிர்வாகம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மேலும் ஒன்றிய அரசின் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணம் மேலும் சுமையை அதிகரிக்கும். எனவே மின் கட்டண உயர்வை அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மின்வெட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணாவிட்டால், பொதுமக்களை திரட்டி அடுத்தகட்டமாக மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.