தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

மரக்கன்றுகளை சேதப்படுத்திய கும்பல்: சிபிஎம் ஆர்ப்பாட்டம்

10 Jul 2026, 9:19 pm
மரக்கன்றுகளை சேதப்படுத்திய கும்பல்: சிபிஎம் ஆர்ப்பாட்டம்
<p><strong>மரக்கன்றுகளை சேதப்படுத்திய கும்பல்: சிபிஎம் ஆர்ப்பாட்டம்</strong></p><p>தருமபுரி, ஜூலை 10- பாப்பாரப்பட்டியில் வாலிபர் சங்கம் சார்பில் நடவு செய்யப்பட்ட மரக்கன்று களை சேதப்படுத்திய கும்பல் மீது நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். தருமபுரி மாவட்டம், பாப்பாரப் பட்டி, பாரதிதாசன் தெருவில் கம்யூ னிஸ்ட் கட்சிக்கு சொந்தமான நிலம் கடந்த 80 ஆண்டுகளாக உள்ளது. இதில் இளைஞர்கள் விளையாட, உடற்பயிற்சி செய்ய மைதானம் உள்ளது. இங்கு சமீ பத்தில் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் தேவ.பேரின்பன்-னின் 74 ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் சார்பில் மரக் கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இந்நி லையில், இந்த மரக்கன்றுகளை சிலர் சேதப்படுத்தியுள்ளனர். மேலும், நிலத் திலிருந்து எல்லைக்கற்களையும் பிடுங்கி வீசியுள்ளனர். இதுகுறித்து பாப் பாரப்பட்டி காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வெள்ளியன்று ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். பாப்பாரப்பட்டி கிராம நிர்வாக அலுவலகம் முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சியின் பகுதிக்குழு செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே.விஸ்வநா தன், மாவட்டக்குழு உறுப்பினர் சின்ன சாமி, மூத்த தலைவர் பெருமாள் மற்றும் ராஜாமணி, சண்முகம், சின்னராஜி, சிலம் பரசன், மனோன்மணி, முருகேசன் உட் பட பலர் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.