பல்லாவரத்தில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்
23 Jul 2026, 11:58 pm
<p><strong>பல்லாவரத்தில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்</strong></p><p> நீட் தேர்வுக்கு எதிராக டெல்லி மற்றும் தமிழ்நாட்டில் போராடும் வாலிபர் மாணவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதலை கண்டித்து வியாழனன்று (ஜூலை 23) பல்லாவரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.தாமோதரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தென்சென்னை மாவட்டக்குழு உறுப்பினர் எம்.சி.பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், பகுதிச் செயலாளர் எம்.தாமோதரன், பகுதிக்குழு உறுப்பினர் ம.சிந்தன், விஜயலட்சுமி எம்.சி., மற்றும் சூரியா (மாணவர் அரங்கம்), சக்திவேல் (வாலிபர் அரங்கம்) ப.ரேவதி (மாதர் அரங்கம்), எம்.சந்திரன் (விவசாயிகள் சங்கம்) உள்ளிட்டோர் பேசினர்.</p>
