தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

காவல் ஆய்வாளர் பணிநீக்கம் கோரி பழனியில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

17 Jun 2026, 9:23 pm
காவல் ஆய்வாளர் பணிநீக்கம் கோரி பழனியில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

காவல் ஆய்வாளர் பணிநீக்கம் கோரி பழனியில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

பழனி, ஜூன் 17- திண்டுக்கல் மாவட்டம் பழனி சாமிநாதபுரம் காவல் நிலைய ஆய் வாளர் மருதுபாண்டியனை பணி நீக்கம் செய்து, அவர் மீது முழுமை யான விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் பழனி கோட் டாட்சியர் அலுவலகம் முன்பு புதன் கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய கட்சி தலைவர்கள், தேர்தல் காலத்தில் சாமிநாதபுரம் காவல் நிலைய ஆய் வாளராக பணியாற்றிய மருது பாண்டியன் சட்டம்-ஒழுங்கு பணி களை முறையாக மேற்கொள்ளா மல், அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டினர்.

மேலும், தாழையூத்து கிரா மத்தில் ஏற்பட்ட நிலத் தகராறு பிரச்ச னையில் கந்து வட்டிக்காரர்களுக்கு ஆதரவாக செயல்பட்டதுடன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஒன்றியக் குழு உறுப்பினர் சின்னத்துரை குடும்பத்தினரை மிரட்டியதாகவும் தெரிவித்தனர்.

தொழிலாளர் மரணம், சாலை விபத்து வழக்குகள் மற்றும் மருத்து வம் தொடர்பான புகார்கள் உள் ளிட்ட பல்வேறு விவகாரங்களில் சம்பந்தப்பட்டவர்களை மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்த தாகவும் ஆர்ப்பாட்டத்தில் குற்றச் சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

இந்த குற்றச்சாட்டுகள் குறித்து தமிழக அரசும் காவல்துறையும் உரிய விசாரணை நடத்தி, மருது பாண்டியன் மீது சட்டப்படி நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவரை பணி மற்றும் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தி னர்.

மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய காவல்துறை அதிகாரிகள் மீது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் எழுவது கவ லைக்குரியது என்றும், இது போன்ற சம்பவங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு தொப்பம் பட்டி ஒன்றிய செயலாளர் என்.கனகு தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் வாழ்த்துரை வழங்கி னார். மாவட்ட செயற்குழு உறுப்பி னர் கே.அருட்செல்வன் நிறைவுரை யாற்றினார்.

இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கமலக்கண் ணன், எம்.ராமசாமி, பழனி ஒன்றியச் செயலாளர் ஆர்.ஈஸ்வரன், மாவட் டக் குழு உறுப்பினர்கள் வ.ராஜ மாணிக்கம், ஜி.கௌரி உள்ளிட் டோர் மற்றும் கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.