படூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் கோரி சிபிஎம் மனு கொடுக்கும் போராட்டம்
17 Jun 2026, 10:22 pm

படூர் ஊராட்சியில் அடிப்படை வசதிகள் கோரி சிபிஎம் மனு கொடுக்கும் போராட்டம்

திருப்போரூர், ஜூன் 17- செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டம் படூர் ஊராட்சியில் சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. படூர் கிளைச் செயலாளர் வி.கார்த்திக் இந்த போராட்டத்திற்குத் தலைமை தாங்கினார். ஒப்பந்தம் செய்யப்பட்டு ஆறு மாதங்க ளாகியும் முழுமை பெறாமல் கிடப்பில் உள்ள படூர் பிரதான சாலையைச் சீரமைக்க வேண்டும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பேருந்து நிறுத்தங்களில் நிழற் குடைகள் அமைக்க வேண்டும் மற்றும் இளை ஞர்களின் ஆரோக்கியத்திற்காக விளை யாட்டுப் பூங்கா அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. இதில் கட்சியின் வட்டச் செயலாளர் எம்.செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பி னர் க.பகத்சிங் தாஸ், இடைக் கமிட்டி உறுப்பி னர்கள் விமலா, கலை பிரகாஷ், சிதம்பரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பொது மக்களின் கோரிக்கை மனுவைப் பெற்றுக் கொண்ட வட்டார வளர்ச்சி அலுவலர் வரும் ஜூன் 30-ஆம் தேதிக்குள் சாலை வசதிகளைச் செய்து தருவதாக எழுத்துப்பூர் வமாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப் பட்டது.