பட்டா வழங்கக் கோரி சிபிஎம் போராட்டம்
16 Jul 2026, 10:09 pm
<p><strong>பட்டா வழங்கக் கோரி சிபிஎம் போராட்டம்</strong></p><p>நாமக்கல், ஜூலை 16- திருச்செங்கோடு அருகே 30 ஆண்டுகளுக்கும் மேலாக குடியிருந்து வரும் மக்களுக்கு நிரந்தர பட்டா வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் எலச்சிபாளை யம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு முற்று கையிட்டு, காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக உறுதி யளித்ததைத் தொடர்ந்து போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே இலுப்பிலி, மாரப்பம்பாளையம், அக ரம், சின்ன எலச்சிபாளையம், கொத்தம் பாளையம், எலச்சிபாளையம், கொன்னை யார் கிராமம், சத்யாநகர் உள்ளிட்ட பகுதிக ளில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக குடியி ருந்து வரும் மக்களுக்கு நிரந்தர பட்டா வழங்கக் கோரி மார்க்சிஸ்ட் கட்சியினர் வியா ழனன்று எலச்சிபாளையம் வருவாய் ஆய்வா ளர் அலுவலகம் முன்பு முற்றுகையிட்டு, காத்திருப்புப் பேராட்டத்தில் ஈடுபட்டனர். முதல்வர் திட்டம், மாவட்ட ஆட்சியர், ஜமா பந்தி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஓராண்டுக்கும் மேலாக மனுக்கள் அளித்தும் பட்டா வழங்கப்படவில்லை என்றும், இத னால் வேலை இழப்பு, வருமான இழப்பு உள் ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், அதற்கான இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர். போராட்டத்திற்கு சிபிஎம் மாரப்பம்பாளையம் கிளை செயலா ளர் பி.தங்கவேல் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு.சுரேஷ், ஒன்றியச் செயலாளர் ஆர்.ரமேஷ், மாவட்டக் குழு உறுப்பினர் பா.கவிதா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் பி.மாரிமுத்து, பி.கிட்டுசாமி, ஆர்.ஈஸ்வரன், எம்.பாலகிருஷ்ணன், எஸ்.ராஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதனையடுத்து வருவாய் ஆய்வாளர் ச. அருண்குமார், அகரம் விஏஓ வீ.சாமிதுரை, பொன்னையார் விஏஓ தினேஷ், இலுப்பிலி விஏஓ பிரகாஷ் மற்றும் காவல் உதவி ஆய் வாளர்கள் வெங்கடாசலம்,ரகுபதி உள் ளிட்டோர் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி எழுத்துப்பூர்வமாக 30 தினங்களில் நடவ டிக்கை எடுக்க பட்டா வழங்குவதாக உறுதி அளித்ததின் பெயரில் போராட்டம் கைவிடப் பட்டது.</p>
