முந்தய பக்கம்

அடிப்படை வசதிகள் கேட்டு சிபிஎம் ஆர்ப்பாட்டம்!

1 hour before
அடிப்படை வசதிகள் கேட்டு சிபிஎம் ஆர்ப்பாட்டம்!
<p><strong>அடிப்படை வசதிகள் கேட்டு சிபிஎம் ஆர்ப்பாட்டம்!</strong></p><p>நாமக்கல், நவ.2-குப்பாண்டபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பகுதி மக்களுக்கு அடிப்படை வசதிகள் கேட்டு மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியம், குப்பாண்டபாளையம் ஊராட்சிக்குட்பட்ட கோட்டைமேடு, தவுடப்பாடி, ஆலங்காடு வலசு பகுதிகளில் 70க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும். விவசாய கூலித் தொழிலாளர்களுக்கு கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் 125 நாட்கள் வேலை வழங்கி, தினக்கூலியை ரூ.700ஆக உயர்த்த வேண்டும். இடிந்து விழும் அபாயத்திலுள்ள குடிநீர் மேல்நிலை தொட்டியை மாற்றி, சுகாதாரமான குடிநீர் வழங்க வேண்டும். </p><p>பழுதடைந்த கான்கிரீட் சாலையை சீரமைத்து, சாக்கடை வடிகால் அமைக்க வேண்டும். குமாரபாளையம்–திருச்செங்கோடு மாவட்ட நெடுஞ்சாலையில் கோட்டைமேடு பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஞாயிறன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கோட்டைமேடு புறவழிச்சாலை பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சியின் ஒன்றியக்குழு உறுப்பினர் பி.ராஜா தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.அசோகன், மாவட்டக்குழு உறுப்பினர் சி.துரைசாமி, ஒன்றியச் செயலாளர் ஆர்.சந்திரமதி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் எம்.நடேசன் வாழ்த்திப் பேசினார். 80-்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram