அடிப்படை வசதிகள் கேட்டு சிபிஎம் ஆர்ப்பாட்டம்
21 Jul 2026, 10:46 pm
<p><strong>அடிப்படை வசதிகள் கேட்டு சிபிஎம் ஆர்ப்பாட்டம்</strong></p><p>நாமக்கல், ஜூலை 21- எலந்தகுட்டை ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு அடிப்படை வசதி கோரிக்கைகளை முன்வைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் வடக்கு ஒன்றியம் எலந்தகுட்டை ஊராட்சிக்குட்பட்ட பகுதிக ளில் குடிநீர், சாக்கடை, தெருவிளக்கு உள்ளிட்ட அனைத்து விதமான அத்தியாவசிய அடிப்படை வசதிகளை பஞ்சாயத்து நிர்வாகம் செய்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாயன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னார் பாளையம் கிளை சார்பில் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளைச் செயலாளர் எம்.நடேசன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயற் குழு உறுப்பினர் எம்.அசோகன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். இதில், ஒன்றியக்குழு உறுப்பி னர் சண்முகம், சிஐடியு பொறுப்பாளர் எம்.ராஜேந்தி ரன், கிளைச் செயலாளர் கண்ணையன் மற்றும் மூத்த தோழர்கள் பி.முத்துசாமி, எம்.வெங்கடாசலம், எஸ். செந்தில்குமார், ஆர்.மணியரசு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிறைவாக, ஊராட்சி உதவி செயலாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.</p>
