கூடுதல் செவிலியர் நியமிக்கக்கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்
10 Jul 2026, 9:25 pm
<p><strong>கூடுதல் செவிலியர் நியமிக்கக்கோரி சிபிஎம் ஆர்ப்பாட்டம்</strong></p><p>நாமக்கல், ஜூலை 10- திருச்செங்கோடு அருகே எலச்சி பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் செவிலியர் களை நியமிக்க வலியுறுத்தி வெள்ளி யன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்டம், எலச்சி பாளையம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து மாணிக்கம் பாளையம் செல் லும் சாலை அகரம் ஊராட்சி மன்ற அலுவலகம் பின்புறம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கடந்த 45 வரு டங்களாக இயங்கி வருகிறது. தின சரி காலை நேரத்தில் மருத்துவம னைக்கு பொதுமக்கள் வருகை தரும் பொழுது ஆதார் கார்டு மூலம் பதிவு செய்கின்றனர். பின்னர் பிரஷர் சுகர் உள்ளிட்டவைகள் பரிசோதனை செய்து மருத்துவரை பார்த்து மாத் திரை பெற்றுக் கொண்டு வெளியே வருவதற்கு சுமார் முக்கால் மணி நேரம் ஆகிறது. கணினியில் பதிவு செய்வதற்கும் பிரஷர் சுகர் பார்ப்ப தற்கும், ஒரே செவிலியர் மட்டும் இருப்பதால் காலதாமதத்திற்கு முக் கிய காரணமாக இருக்கின்றது. சில நேரங்களில் ஊசி போடுவது பிரஷர் சுகர் மற்றும் கணினியில் பதிவு செய் வது, ஒரே செவிலியராக இருக்கும் நிலையில், மருத்துவம் பார்க்க வரு பவர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, கூடுதல் செவிலியர் களை நியமிக்க வேண்டும். 24 மணி நேரமும் மருத்துவமனை செயல்படு வதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி எலச்சிபாளையத்தில், மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் மேற்கு ஒன்றியச் செயலாளர் ஆர். ரமேஷ் தலைமையில் நடைபெற்ற இவ்வியக்கத்தில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பழனி யம்மாள், கவிதா, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, குப்பு சாமி, ராஜி, மூத்த தோழர் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மூத்த தோழர் பி.சுரேஷ் நன்றி உரை யாற்றினார்.</p>
