கழிவுநீர் தேங்கிய இடத்தில் நின்று மதுரையில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்
27 Oct 2026, 10:29 pm
<p>மதுரை, அக்.27-மதுரை மாநகராட்சியின் 21, 22-வது வார்டுகளில் நிலவும் அடிப்படை வசதிகள் தொடர்பான பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வலியுறுத்தி, கழிவுநீர் தேங்கிய இடத்தில் நின்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை கண் டனஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.</p><p>மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு ஒன்றாம் பகுதிக் குழுவுக்கு உட்பட்ட 21, 22-வது வார்டு கிளைகள் சார்பில், அருள்தாஸ் புரம் தண்ணீர்த் தொட்டி அருகிலுள்ள டிவிஷன் அலுவலகம் முன்பு இந்த ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.</p><p>ஆர்ப்பாட்டத்துக்கு பகுதிக்குழு உறுப்பினர் வி.பாலசுப்ரமணியன் தலைமை வகித்தார். பகுதிக்குழு உறுப்பினர் ஜெயக்கொடி ஆர்ப்பாட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார். முன்னாள் மாமன்ற உறுப்பினர் பா.பழனியம்மாள், பகுதிக்குழுச் செயலாளர் வி.கோட்டைச்சாமி ஆகியோர் மாநகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்துப் பேசினர்.ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து மாநகர் மாவட்டச் செயலாளர் மா.கணேசன் உரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வை.ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p><p>21, 22-வது வார்டுகளில் நிலவும் அடிப்படை வசதிக் குறைபாடுகளுக்குத் தீர்வு காண மாநகராட்சி நிர்வாகம் உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.</p>
