முந்தய பக்கம்

உள்ளாட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்திடுக சிபிஎம் ஆர்ப்பாட்டம்

6 hours before
உள்ளாட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்திடுக சிபிஎம் ஆர்ப்பாட்டம்

உள்ளாட்சிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்திடுக சிபிஎம் ஆர்ப்பாட்டம்

கோவை, நவ.18-உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒன்றிய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.இதன்ஒருபகுதியாக கோவை மாவட்டத்தில் சூலூர் பேரூராட்சி, கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், கிழக்குமண்டலம், கோவை சின்னவேடம்பட்டி பிரிவு அலுவலகம், ஒத்தக்கால் மண்டப பேரூராட்சி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் மாவட்டச் செயலாளர் சி.பத்மநாபன்,மாநிலக்குழுஉறுப்பினர் ஏ.ராதிகா, கோவை மாநகராட்சி மாமன்றகுழு தலைவர் வி.இராமமூர்த்தி, பாலர் சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் என்.அமிர்தம் மற்றும் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், இடைக்குழு செயலாளர்கள் சண்முகசுந்தரம், பஞ்சலிங்கம், மணி, மாமன்ற உறுப்பினர்கள், பேரூராட்சிஉறுப்பினர்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

ஈரோடு

ஈரோடு மாவட்டம், ஆப்பக்கூடல் பேரூராட்சி அலுவலகம் முன்பு, சிபிஎம் கிளைச் செயலாளர் ஏ.ஆர்.துரைசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.பி.பழனிசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.மாணிக்கம், 14 ஆவது வார்டு உறுப்பினர் கே.விஜயலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram