தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

கிருஷ்ணகிரியில் விவசாயிக்கு மிரட்டல்! காவல் துறையை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

17 Jun 2026, 12:07 am
கிருஷ்ணகிரியில் விவசாயிக்கு மிரட்டல்!  காவல் துறையை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

கிருஷ்ணகிரியில் விவசாயிக்கு மிரட்டல்! காவல் துறையை கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

ஊத்தங்கரை, ஜூன் 16- கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வட்டம் கல்லாவி அருகே உள்ள பெரு மாள் நாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் தருமன். இவர் கடந்த ஏப்ரல் 25-ம் தேதி தனது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, காட்டு சிங்கிரிப்பட்டியைச் சேர்ந்த மாரப்பன், அவரது மனைவி ராதா மற்றும் அவர்களது குடும்பத்தினர் பத்து பேருக்கும் மேற்பட்டோர் நிலத்தை அபகரிக்கும் நோக்கில் தருமனை வழிமறித்துத் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். நிலம் தங்களுக்குச் சொந்தமானது என்று கூறி, அந்த இடத்தில் வேலை செய்யக்கூடாது என மிரட்டியதுடன், சாதிப் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தி கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படு கிறது. இது தொடர்பாக கடந்த ஏப்ரல் 4-ம் தேதியே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் வட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சித் தலைவர்கள் புகார் அளித்தி ருந்தனர். இருப்பினும், கடந்த இரண்டு மாதங்களாகக் காவல் துறையினர் மாரப்பன் குடும்பத்தினர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனத் தெரி கிறது. இது குறித்து நேரில் கேட்டதற்கு எவ்வித பதிலும் அளிக்கப்படாததால், காவல் துறையினரைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

இதனைத் தொடர்ந்து, ஜூன் 15-ம் தேதி ஊத்தங்கரை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சிபிஎம் ஊத்தங்கரை வட்ட குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட குழு உறுப்பினர் பாஞ்சாலராசன் தலைமை தாங்கினார். வட்டச் செயலாளர் சபாபதி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சி.சுரேஷ் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, விவசாயியை மிரட்டிய மாரப்பன் குடும்பத்தினர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் மற்றும் நில அபகரிப்புச் சட்டத்தின் கீழ் உடனடியாக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், மாவட்ட நிர்வாகமும் காவல் துறையும் இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.கே. நஞ்சுண்டன், மாவட்ட குழு உறுப்பினர் வி.கோவிந்தசாமி மற்றும் சிபிஎம், த.வி.ச, வி.தொ.ச நிர்வாகிகள் செல்வராசு, எத்திராஜ், லெனின், வரதராஜ், அண்ணாமலை, சேகர், முத்துக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.