தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தி கூடல்நகரில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்
11 Oct 2026, 9:32 pm
<p><strong>தேர்தல் ஆணையர் பதவி விலக வலியுறுத்தி கூடல்நகரில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்</strong></p><p>மதுரை, அக்.11-13.5 கோடி வாக்குகள் நீக்கப்பட்ட விவகாரத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வலியுறுத்தியும், தில்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தின்போது கைது செய் யப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், இடதுசாரி அமைப்புகளின் தலைவர்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் மதுரை புறநகர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கூடல்நகரில் ஞாயிற்றுக் கிழமை கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.</p><p>மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ்.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன் ஆர்ப்பாட் டத்தைத் தொடங்கி வைத் துப்பேசினார். மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா கண்டன உரையாற்றினார். மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.கே.பொன்னுத்தாய்ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினார். கிளைச் செயலாளர் மனோகரன் நன்றி கூறினார்.மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பா.ரவி, எஸ்.பி.இளங்கோவன், வி.பி.முருகன், பி.ஜீவானந்தம் உள்ளிட்ட மாவட்டக் குழு உறுப்பினர்கள், இடைக் குழுச் செயலாளர்கள் மற் றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.</p>
