கொல்லங்குடியில் சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்
5 Jun 2026, 1:52 am
<p><strong>கொல்லங்குடியில் சிபிஎம் கண்டன ஆர்ப்பாட்டம்</strong></p><p>சிவகங்கை, ஜூன் 4- சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் தாலு காவிற்கு உட்பட்ட கொல் லங்குடி பேருந்து நிறுத்தம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் காளை யார்கோவில் ஒன்றியக்குழு சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற் றது. கேரள முன்னாள் முதல் வரும், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பின ருமான பினராயி விஜயன் இல்லத்தில் அரசியல் உள் நோக்கத்துடன் சோதனை நடத்திய அமலாக்கத்துறை யை கண்டித்தும், பெட் ரோல், டீசல் மற்றும் சமை யல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் இந்த ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன் றிய செயலாளர் எம்.திரு நாவுக்கரசு தலைமை தாங்கி னார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துராம லிங்கபூபதி, மாவட்டச் செய லாளர் ஏ.ஆர். மோகன் ஆகி யோர் கண்டன உரையாற்றி னர். மேலும், மாவட்ட விவ சாய சங்க துணைத் தலை வர் அண்ணாத்துரை, முன் னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மெய்ஞானம், மாவட்டக் குழு உறுப்பினர் மெய்யப்பன், ஒன்றியக் குழு உறுப்பினர் வெள் ளைச்சாமி மற்றும் வாலிபர் சங்கத்தைச் சேர்ந்த ஓம்.பிர காஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கருத்துரையாற்றி னர். நிகழ்ச்சியின் நிறைவில் எம்.சிதம்பரம் நன்றி கூறி னார்.</p>
