கத்திவாக்கம் ரயில் நிலையத்திற்கு செல்லும் பாதையை மூடிய ரயில்வே நிர்வாகம்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
3 Jun 2026, 11:33 pm
<p><strong>கத்திவாக்கம் ரயில் நிலையத்திற்கு செல்லும் பாதையை மூடிய ரயில்வே நிர்வாகம்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்</strong></p><p>சென்னை, ஜூன் 3- திருவொற்றியூர் கத்திவாக்கம் ரயில் நிலையப் பாதையை எவ்வித முன்னறிவிப்புமின்றி, இரவோடு இரவாக மூடிய ரயில்வே நிர்வாகத்தின் மக்கள் விரோத போக்கைக் கண்டித்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவொற்றியூர் வடக்கு பகுதிக்குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வடசென்னை மாவட்டச் செய லாளர் எம்.ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசுகையில், கத்திவாக்கம் ரயில் நிலையத்தை அசோக் லேலண்ட் மற்றும் எண்ணூர் பவுண்டரி ஆகிய நிறுவனங்களில் பணி புரியும் 3,000க்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள், ஊழியர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் தங்களின் அன்றாடத் தேவைக்காக தினசரி பயன்படுத்தி வரு கின்றனர். நிலைமை இவ்வாறு இருக்க, கடந்த மே 22 அன்று ரயில்வே நிர்வாகம் பொதுமக்களிடம் எந்த் கருத்தும் கேட்காமல் இரவோடு இரவாக ரயில்வே பாதையை இருபுறமும் அடைத்துள்ளனர். ரயில்வே நிர்வாகத்தின் இந்த தன்னிச்சையான முடிவால், தொழிலா ளர்கள், ஊழியர்கள், பள்ளி, கல்லூ ரிக்கு செல்லும் மாணவ-மாணவியர் நீண்ட தூரம் சுற்றிச் செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு மாற்றுப் பாதை யைக்கூட ஏற்படுத்தித் தராமல், பாதையை மூடியிருப்பது ரயில்வே நிர்வாகத்தின் அலட்சியப் போக் கையே காட்டுகிறது. எனவே பொதுமக்களின் கோரிக் கையை ஏற்று, உடனடியாக அடைக் கப்பட்ட கத்திவாக்கம் ரயில் நிலைய பாதையை தற்காலிகமாக திறந்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். உயர்மட பாலம் அல்லது சுரங்கப் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் பொதுமக்களை திரட்டி அடுத்தகட்ட மாகப் மிகப்பெரிய அளவிலான தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் என்று எச்சரித்தார். பகுதிச் செயலாளர் எஸ்.கதிர் வேல் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன், சுரேஷ் (அசோக் லேலண்ட்), தனுஷ்கோடி (பவுன்ட்ரி), அண்ணா நகர் கிராம நிர்வாகி தாமோ தரன், சாஸ்திரி நகர் கிராம நிர்வாகி சுந்தர், சிபிஎம் நிர்வாகிகள் பார்த்த சாரதி, சுரேஷ்பாபு, வெங்கடையா, ராஜ் குமார், அலமேலு, தியாகராஜன், முனி யசாமி, அகல்யா (மாணவர்சங்கம்) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.</p>
