முந்தய பக்கம்

கரடிகுளம் வாலிபர் சஞ்சய் படுகொலையைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்

26 May 2026, 9:57 pm
கரடிகுளம் வாலிபர் சஞ்சய் படுகொலையைக்   கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்
<p><strong>கரடிகுளம் வாலிபர் சஞ்சய் படுகொலையைக் கண்டித்து சிபிஎம் ஆர்ப்பாட்டம்</strong></p><p>தூத்துக்குடி, மே 27- கோவில்பட்டி கழுகுமலை அருகே கரடிகுளம் பகுதியைச் சேர்ந்த இளைஞர் சஞ்சய்‌ கொடூரமாக கொலை செய்யப் பட்டதைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளி களுக்கு கடும் தண்டனை விரைவாக வழங்கக்கோரியும், வழக்கு முடியும் வரை குற்றவாளிகள் பிணையில் வெளியில் வராமல் இருப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க கோரியும், சஞ்சய் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதி வழங்க கோரியும் திங்களன்று கழுகுமலை காந்தி மைதா னத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் கயத்தார் ஒன்றிய செயலாளர் சாலமன் ராஜ் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க தூத்துக்குடி மாவட்ட செயலாளர் தினேஷ் குமார் மற்றும் கரடிகுளம் ஊர் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram