தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

சேதமடைந்த தேசிய நெடுஞ்சாலைகளைச் சீரமைக்கக் கோரி சிபிஎம் மறியல்! ஆர். செல்லசுவாமி எம்எல்ஏ உட்பட ஆயிரம் பேர் கைது

yesterday
சேதமடைந்த தேசிய நெடுஞ்சாலைகளைச் சீரமைக்கக் கோரி சிபிஎம் மறியல்! ஆர். செல்லசுவாமி எம்எல்ஏ உட்பட ஆயிரம் பேர் கைது

சேதமடைந்த தேசிய நெடுஞ்சாலைகளைச் சீரமைக்கக் கோரி சிபிஎம் மறியல்! ஆர். செல்லசுவாமி எம்எல்ஏ உட்பட ஆயிரம் பேர் கைது

நாகர்கோவில், நவ. 12 –கன்னியாகுமரி மாவட்டத்தில் களியக்காவிளை – கன்னியாகுமரி, பார்வதிபுரம் – காவல்கிணறு தேசிய நெடுஞ்சாலைகளைச் சீரமைக்கக் கோரி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தக்கலையில் வியாழக்கிழமை (நவ. 12)சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.சட்டமன்ற உறுப்பினர் ஆர். செல்லசுவாமி தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கியப் போக்குவரத்து வழித்தடங்களான களியக்காவிளை – கன்னியாகுமரி, பார்வதிபுரம் – காவல்கிணறு தேசிய நெடுஞ்சாலைகள் சேதமடைந்த நிலையில் உள்ளன. களியக்காவிளை அருகே காரோடு முதல் கன்னியாகுமரி வரையிலான 54 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை 66 அமைக்கும் பணி 2017-இல் தொடங்கி, 9 ஆண்டுகளாகியும் முழுமையடையவில்லை. 90 சதவீதப்பணிகள் நிறைவடைந்ததாகக் கூறப்பட்டாலும், பழைய சாலையையே பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது.அதேபோல், பார்வதிபுரம் – காவல்கிணறு இடையிலான 16.2 கி.மீ. தேசிய நெடுஞ்சாலை 944 பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், உள்ளூர் மக்கள் பயன்படுத்தும் பழைய என்.எச். 47பி சாலை பராமரிப்பின்றிக் கிடக்கிறது.

பார்வதிபுரம், மார்த்தாண்டம் மேம்பா லப் பணிகளால் பத்தாண்டுகளுக்கும் மேலாகப் போக்குவரத்து பாதிக்கப்

பட்டுள்ளதுடன், விபத்துகளும் உயிரிழப்புகளும் தொடர்கின்றன.சாலைகளைச் சீரமைக்கப் போதிய நிதி ஒதுக்கிப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், சட்டமன்ற உறுப்பினர் ஆர். செல்லசுவாமியும் சட்டப்பேரவையில் கோரிக்கைவிடுத்தார். எனினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.இந்நிலையிலேயே, வியாழக்கிழ மையன்று (நவ. 12) தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திருவனந்தபுரம் –நாகர்கோவில் சாலையில் (பழைய என்.எச். 47) சட்டமன்ற உறுப்பினர் ஆர். செல்லசுவாமி தலைமையில் மறியல்போராட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் என்.எஸ். கண்ணன் போராட்டத்தைத் தொடங்கி வைத்துப்பேசினார். கோரிக்கைகளை விளக்கி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.வி. பெல்லார்மின், முன்னாள்சட்டமன்ற உறுப்பினர் ஆர். லீமாறோஸ் ஆகியோர் பேசினர். போராட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயற்குழுஉறுப்பினர்கள், 400-க்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.