ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிர்ப்பு கல்லலில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்
yesterday
<p><strong>ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிர்ப்பு கல்லலில் சிபிஎம் ஆர்ப்பாட்டம்</strong></p><p>சிவகங்கை, ஜூன் 22- சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தாலுகா கல்லல் ஒன்றியக்குழு சார்பில், ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கை களை கண்டித்து கல்லல் தபால் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார் பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப் படுத்த வேண்டும் என்றும், 100 நாள் வேலைத் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை குறைத்து திட்டத்தை முடக்கும் முயற்சி யை கைவிட வேண்டும் என்றும் வலியு றுத்தப்பட்டது. மேலும், தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தி தொழிலாளர்களின் உரிமைகளை பறிக்கும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ. ஆறுமுகம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஏ.ஆர்.மோகன் கண்டன உரை யாற்றினார். தாலுகா செயலாளர் முரு கேசன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.எல்.சக்திவேல், கிளைச் செயலாளர் பி. பொன்ராஜ், ஜே.காதர் உசேன், எஸ். வெள்ளை, பி.பழனிக்குமார், ராஜேந்தி ரன், கருப்பையா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தபால் நிலையம் முன்பு தொடங்கிய ஆர்ப்பாட்டப் பேரணி, யூனியன் அலுவல கம் வரை சென்று நிறைவடைந்தது. பின்னர், கோரிக்கைகள் அடங்கிய மனுவை வட்டார வளர்ச்சி அலுவலர் மகாலிங்கத்தி டம் வழங்கினர். மனுவை பெற்றுக் கொண்ட அவர், வெளியாத்தூர் மற்றும் கண்டரமாணிக்கம் ஊராட்சிகளில் வியாழக்கிழமை முதல் வேலைகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் சாத்தனூர், தெற்குப்பட்டு, பொன்னாங்குடி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.</p>
