தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

ஊராட்சி அலுவலகம் முன் சிபிஎம் காத்திருப்புப் போராட்டம்

6 Feb 2026, 5:17 pm
ஊராட்சி அலுவலகம் முன் சிபிஎம் காத்திருப்புப் போராட்டம்
<p><strong>ஊராட்சி அலுவலகம் முன் சிபிஎம் காத்திருப்புப் போராட்டம்</strong></p> <p>நாமக்கல், பிப்.6- மரப்பறை கிராம மக்களின் வாழ் வாதார பிரச்சனையை மையமாக வைத்து, ஊராட்சி அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வெள்ளியன்று காத்தி ருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட னர். நாமக்கல் மாவட்டம், திருச் செங்கோடு வட்டம், மல்லசமுத்தி ரம் ஒன்றியம், மரப்பறை கிரா மத்தில் வசித்து வரும் மக்களுக்கு வழங்கப்பட்ட நிலப் பட்டாக்களை, உடனடியாக கிராம கணினி கணக் கில் பதிவேற்றம் செய்ய வேண்டும். மேலும், புதிய ரேசன் கார்டு பெறுவ தற்கு தடையாக உள்ள வீட்டு வரி ரசீது வழங்காத ஊராட்சி நிர்வா கத்தின் மெத்தனப் போக்கை கண் டித்தும் இந்தப் போராட்டம் முன் னெடுக்கப்பட்டது. சிபிஎம் கிழக்கு ஒன்றியச் செய லாளர் வீ. தேவராஜன் தலைமை யில் நடைபெற்ற இப்போராட்டத்தை, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.தமிழ்மணி தொடக்கி வைத்து &nbsp;உரையாற்றினார். எலச்சிபாளை யம் முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் சு. சுரேஷ் வாழ்த்திப் பேசினார். இந் நிகழ்வில் மாவட்டக்குழு உறுப்பி னர் கோ. பழனியம்மாள், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பூபதி முருகன், மோகனப்பிரியா, விஜய், மாற்றுத் திறனாளிகள் சங்கத் தலைவர் பொன்னுசாமி, கிளைச் செயலா ளர் சாந்தி உட்பட திரளானோர் பங் கேற்றனர். காலை முதல் மாலை வரை &nbsp;இந்த போராட்டம் நீடித்த நிலை யில், போராட்ட இடத்திற்கு, திருச் செங்கோடு வட்டாட்சியர் கிருஷ்ண வேணி, தேர்தல் பிரிவு வட்டாட்சியர் ரவி, வருவாய் ஆய்வாளர் விஜயா மற்றும் கிராம நிர்வாக அலுவலர் அமுதா ஆகியோர் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பாதிக் கப்பட்ட ஏழு குடும்பங்களின் மனுக் கள் மீது விரைவில் உரிய நடவ டிக்கை எடுக்கப்படும் என அதிகாரி கள் தரப்பில் எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிக மாக கைவிடப்பட்டது.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.