கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு சிபிஎம் ஆர்ப்பாட்டம்
11 Dec 2025, 5:47 pm
<p><strong>கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு சிபிஎம் ஆர்ப்பாட்டம்</strong></p>
<p>சிதம்பரம், டிச.11 – சிதம்பரம் அருகே உள்ள கீரப்பாளையம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு, சிபிஎம் கட்சியின் கீரப்பாளையம் ஒன்றியம் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் செல்லையா தலை மையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வி. சுப்பு ராயன் மற்றும் பழ. வாஞ்சிநாதன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். சாத்தமங்கலம் அருந்ததியர் தெரு மக்க ளுக்குப் பாலம் வசதி செய்து கொடுக்க வேண்டும், வடஹரி ராஜபுரம் கிராமத்தின் 3வது வார்டு மக்களுக்குக் குடிநீர் வசதி செய்து புதிய வாட்டர் டேங்க் கட்ட வேண்டும், பூதங்குடி கிராமத்தில் மயானச் சாலை வசதி செய்து கொடுக்க வேண்டும், அத்துடன் 100 நாள் வேலை திட்டத்தில் 4 மாதமாக வேலை தராத கிராமங்களுக்கு உடனடியாக வேலை வழங்கி சம்பளப் பாக்கியை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பின்னர், கோரிக்கைகள் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது. 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், பூட்டுப் போடும் போராட்டம் நடத்தப்படும் என சிபிஎம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
