தீக்கதிர்
ஊடக உலகில் உண்மையின் பேரொளி
E-Paper
முகப்புகாணொளிகள்பிற செய்திகள்
முந்தய பக்கம்

வீட்டுமனை பட்டா கேட்டு சிபிஎம் போராட்டம்

16 Jul 2026, 10:17 pm
வீட்டுமனை பட்டா கேட்டு சிபிஎம் போராட்டம்
<p><strong>வீட்டுமனை பட்டா கேட்டு சிபிஎம் போராட்டம்</strong></p><p>உடுமலை, ஜூலை 16- கொமரலிங்கம் பேரூராட்சியில் வீட்டு மனை இல்லாத ஏழை எளிய மக்களுக்கு உட னடியாக பட்டா வழங்க வலியுறுத்தி, மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கொமரலிங் கம் பேருந்து நிறுத்தம் அருகில் வியாழ னன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொமரலிங்கம் பேரூராட்சியில் வசிக் கும் வீடற்ற ஏழை மக்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி கடந்த நான்கு ஆண்டு களுக்கும் மேலாகப் பலமுறை விண்ணப்பித் தும், சம்பந்தப்பட்ட நிர்வாகம் எவ்வித நடவ டிக்கையும் எடுக்கவில்லை. நிர்வாகத்தின் அலட்சியத்தை கண்டித்தும், அரசின் கவ னத்தை ஈர்க்கும் வகையில், மார்க்சிஸ்ட் கட்சி யின் தலைமையில் மடத்துக்குளம் வட்டாட்சி யர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட் டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் அறைகூவலை யேற்று, அப்பகுதி மக்கள் வட்டாட்சியர் அலு வலகத்தின் முன் திரண்டனர். இதனையடுத்து, வட்டாட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரி கள் தரப்பில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதில், விண்ணப்பித்த அனைவருக்கும் இரண்டு வாரங்களுக்குள் பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப் படும்” என அதிகாரிகள் தரப்பில் உறுதியளிக் கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தங்க ளது கோரிக்கைகளை விளக்கும் வகையி லும், அதிகாரிகளின் உறுதியை நினைவூட் டும் வகையிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொமரலிங்கம் கிளைச் செயலாளர் ஆறுமு கம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்தில், கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கி.கனகராஜ், தாலுகா செயலா ளர் ஆர்.வி. வடிவேல், சிஐடியு தாலுகா செய லாளர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட திரளான பொதுமக்களும் கட்சித் தோழர்களும் கலந்து கொண்டனர்.</p>
Share
FacebookXWhatsAppTelegram

பரிந்துரைகள்

பரிந்துரைகள் இல்லை.

எங்களை பற்றிதொடர்புவிளம்பரம்PrivacyTerms
© தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
© 2026 தீக்கதிர் தமிழ் நாளிதழ். அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.