கோயம்புத்தூர் விரைவு செய்திகள்
16 Jul 2026, 10:13 pm

தனியாக இருந்த தம்பதியிடம் கத்தி முனையில் மிரட்டி பணம் பறிப்பு

உடுமலை, ஜூலை 16- உடுமலை அருகே இராவணபுரம் பகுதியில் தோட்டத்து வீட்டில் வசித்து வந்த தம்பதியரை கத்தி முனையில் மிரட்டி, 45 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்த கும்பலை தளி போலீ சார் தேடி வருகின்றனர். இராவணபுரம் தென்னந்தோப்பு சாலையில் வசிப்பவர் அருள்குமார்; இவரது மனைவி பிருந்தா. வியாழனன்று அதி காலை நாய் குரைக்கும் சத்தம் கேட்டு அருள்குமார் வெளியே வந்தபோது, அங்கு மறைந்திருந்த நால்வர் கும்பல் அவரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டியது. தொடர்ந்து, வீட்டிற் குள் புகுந்து பிருந்தாவையும் மிரட்டிய கொள்ளையர்கள், பீரோவில் இருந்த ரூ.45 ஆயிரம் ரொக்கம் மற்றும் செல் போன்களைப் பறித்துக்கொண்டு, தம்பதியரை வீட்டிற்குள் பூட்டிவிட்டுத் தப்பினர். தகவல் கொடுக்க வழியின்றி தவித்த தம்பதியரை, அப் பகுதியினர் மீட்டனர். இச்சம்பவம் அப்பகுதி விவசாயிகளி டையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. தனியாக வசிக்கும் விவ சாயிகளுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரிக்கை எழுந்துள்ள நிலையில், தளி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தண்ணீர் தட்டுப்பாடு - மனு!

அவிநாசி, ஜூலை 16 – அவிநாசி அருகே ஸ்ரீ ராயர் நகர் பகுதியில் தண்ணீர் பிரச்சனையை தீர்க்கக்கோரி அப் பகுதி பொதுமக்கள் வியாழனன்று கோரிக்கை மனு அளித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் அவிநாசி ஒன்றியம், வேட்டுப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ஸ்ரீ ராயர் நகர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப் பகுதியில் கடந்த சில நாட்களாக உப்புத் தண்ணீர் விநியோகம் சீராக இல்லாததால் பொதுமக்கள், குறிப்பாகப் பெண்கள் மற்றும் முதியவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வரு கின்றனர். மேலும், இப்பகுதிக்குத் தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை சேகரிக்க வரு வதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள் ளது. இப்பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண வலியுறுத்தி, அப்பகுதி பொதுமக்கள் வியாழனன்று அவிநாசி ஊராட்சி ஒன்றிய ஆணையாளரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட ஆணையாளர், சம்பந்தப் பட்ட அதிகாரிகள் மூலம் உரிய ஆய்வு மேற் கொண்டு, தண்ணீர் விநியோகத்தை சீரமைக்கவும், தூய்மைப் பணிகளை மேற் கொள்ளவும் விரைந்து நடவடிக்கை எடுக்கப் படும் என உறுதியளித்தார்.

மேகதாது அணை முயற்சியை கைவிடக்கோரி ஒகேனக்கலில் ஜூலை 22-ல் சிபிஎம் ஆர்ப்பாட்டம்

தருமபுரி, ஜூலை 16- காவிரியில் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசை வலியுறுத்தியும், மேகதாது அணை கட்டும் முயற்சியை கைவிடக் கோரியும், ஜூலை 22 அன்று ஒகேனக்கலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதுகுறித்து சிபிஎம் தருமபுரி மாவட்டச் செயலாளர் இரா. சிசு பாலன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் தெரிவித்துள்ளதாவது, காவிரி யில் நீர்வரத்து சரிந்து தற்போது வெறும் 300 கன அடியாக உள்ளது. உபரி நீர் காலங்களில் கடலில் கலக் கும் அளவுக்கு தண்ணீர் திறந்து விடும் கர்நாடகா, வறட்சிக் காலங்க ளில் அணைகளை மூடிக்கொள் கிறது. இதனால் டெல்டா விவசாயம் மட்டுமின்றி, தமிழகத்தின் 22 மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது. குறிப் பாக, தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களின் வாழ்வாதாரமான ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் கானல் நீராகும் ஆபத்து ஏற்பட்டுள் ளது. ஒகேனக்கல் பகுதியில் சிறு கடைகளுக்குக் கூட தண்ணீர் வழங்க முடியாத வறட்சி நிலவுகிறது. காவிரி மேலாண்மை ஆணைய விதிப்படி ஜூன், ஜூலை மாதங்களில் தர வேண்டிய தண்ணீரைத் தராமல் கர்நாடக அரசு பிடிவாதம் காட்டு கிறது. இது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது. எனவே, தமிழகத்தின் தண்ணீர் உரிமையை பாதுகாக்க வலியுறுத்தி, ஜூலை 22 காலை ஒகே னக்கலில் சிபிஎம் சார்பில் பெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. தமிழகத்தின் வாழ்வாதாரப் போராட் டத்தில் அனைத்து தரப்பினரும் திர ளாகப் பங்கேற்க வேண்டும். இவ் வாறு அந்த அறிக்கையில் கூறப்பட் டுள்ளது.