குடியிருப்போருக்கு பட்டா வழங்க வலியுறுத்தல் சிபிஎம் காத்திருப்பு போராட்டம் வெற்றி
4 hours before
<p><strong>குடியிருப்போருக்கு பட்டா வழங்க வலியுறுத்தல் சிபிஎம் காத்திருப்பு போராட்டம் வெற்றி</strong></p><p>விழுப்புரம், நவ.14-விழுப்புரம் மாவட்டம்,செஞ்சி வட்டம், நரசிங்கராயன்பேட்டை ஊராட்சி எம்.ஜி.ஆர் நகர் பட்டா எண். 132, புல எண் 8/6 ல் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வரும் குடும்பங்களுக்கு உடனடியாக குடிமனைப்பட்டா வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வெள்ளியன்று (நவ.13) செஞ்சி வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு வட்ட செயலாளர் ஜி.சுப்ரமணியன் தலைமையில் காத்திருக்கும் போராட்டம் நடத்தினர்.</p><p>இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.ராமமூர்த்தி, மாவட்ட செயலாளர் என்.சுப்ரமணியன், மாநில குழு உறுப்பினர் எஸ்.கீதா உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர். இதையடுத்து உடனடியாக வட்டாட்சியர் அழைத்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தி வரும் டிசம்பர் 15க்குள் பட்டா வழங்குவதாக உறுதிமொழியை எழுத்து பூர்வமாக கொடுத்தார். இதையடுத்து காத்திருப்பு போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது.</p>
